நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து நண்பர்கள் ஒரு சிறிய டீ பிரேக் எடுத்ததால் நல்வாய்ப்பாக உயிர்தப்பிய சுவாரசியமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சத்தீஸ்கரைச் சேர்ந்த ஐந்து நண்பர்கள் ஆன்மீகச் சுற்றுலா மற்றும் விடுமுறைப் பயணமாக நேபாளத்திற்குச் சென்றிருந்தனர். அவர்கள் மலைப்பாதையில் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது, வழியில் இருந்த ஒரு சிறிய கடை அருகே டீ குடிப்பதற்காக வாகனத்தை நிறுத்தியுள்ளனர். அவர்கள் டீ குடித்துக் கொண்டிருந்த அந்த சில நிமிட இடைவெளிக்குள், அவர்கள் கடந்து செல்லவிருந்த நிலப்பரப்பில் திடீரென பயங்கர நிலச்சரிவும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது.