AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தன் மீதான விமர்சனங்கள் குறித்து வெளிப்படையாக பேசிய நடிகர் சூரி

Soori talks about the criticism | தமிழ் சினிமாவில் தற்போது தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் நடிகர் சூரி சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் தன் மீது வரும் விமர்சனங்கள் குறித்து வெளிப்படையாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தன் மீதான விமர்சனங்கள் குறித்து வெளிப்படையாக பேசிய நடிகர் சூரி
நடிகர் சூரிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Sep 2026 11:52 AM IST

தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய சினிமாவில் காமெடி நடிகர்களாக இருந்து பிறகு நாயகன்களாக நடிகர்கள் உருவெடுப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது. ஆனால் அப்படி மாறும் நடிகர்கள் அதில் நிலைத்து இருக்கிறார்களா இல்லையா என்பதே அவர்களின் சினிமா கெரியரில் முக்கியமான விசயமாக உள்ளது. ஆம் அப்படி தமிழ் சினிமாவிலும் பல காமெடி நடிகர்கள் நாயகனாக படங்களில் நடித்து உள்ளனர். அதில் குறைந்தபட்ட நடிகர்கள் மட்டுமே தொடர்ந்து நாயகனாக ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று தமிழ் சினிமாவில் நாயகனாகவே வலம் வருகின்றது. அப்படி இந்த காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் சூரி. காமெடி நடிகராக தனது சினிமா பயணத்தை தொடங்கி தற்போது நாயகனாக தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் நடிகர் சூரி நாயகனாக நடித்து இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் நடிகர் சூரி நாயகனாக நடித்து அடுத்ததாக தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள படம் மண்டாட்டி. படம் வருகின்ற 10-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் நடிகர் சூரி சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தன் மீதான விமர்சனங்கள் குறித்து வெளிப்படையாக பேசிய நடிகர் சூரி:

அந்த வகையில் நடிகர் சூரி சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் தன்மீதான விமர்சனங்கள் குறித்து வெளிப்படையாக பேசினார். அதில் அவர் பேசியதாவது, இக்காலத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும். பலர் எப்போதும் குறைகளைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். நாம் ஒரு பத்து நிமிடம் பாசிட்டிவாகபேசினால், அவர் எப்படி இவ்வளவு நன்றாகப் பேசினார்? அதில் எந்தக் கண்டெட்டும் இல்லையே என்று அவர்கள் நினைக்கிறார்கள். நான் செய்த தவறுக்காக யாராவது சுட்டிக்காட்டினால், அதை நான் உணர்ந்து கொள்வேன்.

அடுத்த முறை அதைத் திருத்திக்கொள்வேன். ஆனால் வெறுப்புணர்ச்சியுடன் வரும் கருத்துகளுக்கு நாம் எதிர்வினையாற்றக் கூடாது. என்னைப் பற்றி விமர்சிக்கும் முன், ஒருவர் தன்னைப்பற்றி முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். யாரோ ஒருவர் எங்கோ வேலையின்றி அமர்ந்து கொண்டு என்னைப் பற்றி விமர்சிக்கிறார்கள். ஆனால் அதைப் படிப்பதற்கு எனக்கு நேரமில்லை. எனக்குச் செய்ய வேண்டிய பல வேலைகள் உள்ளன என்று சூரி அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Also Read… நீ உள்ள… நா வெளிய… 15 ஆண்டுகளைக் கடந்தது அஜித் குமாரின் மங்காத்தா படம்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… GV Prakash: நாங்கள் பிரிந்துவிட்டோம்.. ஆனாலும் – சைந்தவி குறித்த மனம் திறந்த ஜி.வி.பிரகாஷ்!

Follow Us