AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Mamitha Baiju: திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மமிதா பைஜூ.. என்ன ஆச்சு அவருக்கு?

Mamitha Baiju Hospitalized: சினிமாவில் தொடர் ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் நெருக்கமான நாயகியாக இருந்துவருபவர் மமிதா பைஜூ. இவர் விஜய் மற்றும் சூர்யாவுடன் படங்களில் பணியாற்றியுள்ளார். இவ்வாறு ஹிட் படங்களை 2026ம் ஆண்டில் கொடுத்த மமிதா பைஜூ, மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். என்ன காரணமா என விவரமாக பார்க்கலாம்.

Mamitha Baiju: திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மமிதா பைஜூ.. என்ன ஆச்சு அவருக்கு?
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மமிதா பைஜூ..Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 01 Sep 2026 17:22 PM IST

மலையாளம் சினிமாவின் மூலம் நாயகியாக நுழைந்து, தற்போது தமிழ் சினிமாவில் அசத்திவரும் நாயகியாக இருந்துவருபவர்தான் மமிதா பைஜூ (Mamitha Baiju). இவரின் நடிப்பில், இந்த 2026ம் ஆண்டில் மட்டும் மொத்தம் 4 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. மலையாளம் சினிமாவில் ஆரம்பத்தில் துணை வேடங்களில் நடித்துவந்த இவர், சூப்பர் சரண்யா மற்றும் பிரேமலு (Premalu) போன்ற படங்களில் மூலம் மிகவும் பிரபலமானார். இதன் பிறகு தமிழில் ரெபெல் என்ற படத்தில், ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு (GV Prakash kumar) ஜோடியாக நடித்து நாயகியாக நுழைந்தார். இதற்க்கு பின் இவருக்கு தமிழில் முதல் ஹிட் படமாக அமைந்தது டியூட் (Dude). அந்த விதத்தில் தமிழில் தொடர்ந்து படங்களில் பணியாற்றுகிறார். அந்த விதத்தில், இந்த 2026ம் ஆண்டில் மட்டும் பல்வேறு படங்களில் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இந்நிலையில், தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம். கடுமையான காய்ச்சல் மற்றும் உடல் வலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த வாரம் திட்டமிடப்பட்டிருந்த கிளைட் மலையாளி நிகழ்ச்சிக்கான தனது ஆஸ்திரேலியப் பயணத்தை ரத்து செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அட எல்லாருமே சீரியல் நடிகர்களா? பிக் பாஸ் 10ல் கலந்துகொள்ளும் ஆண் போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா?

மமிதா பைஜூ மருத்துவமனையிலிருந்து பேசியதாக வைரலாகும் வீடியோ பதிவு:

கிளைட் மலையாளி வெளியிட்ட காணொளி ஒன்றில் மமிதா பைஜூ, ஓய்வெடுப்பதை தவிர தனக்கு வேறு வழியில்லை என்றும், முழு ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். துரதிர்ஷ்டவசமாக, நாம் வாக்குறுதியளித்த நாளில் என்னால் அங்கு வந்து சேர முடியாது. நான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். ஏதேனும் வாய்ப்பு இருந்திருந்தால், நான் அங்கு வந்திருப்பேன், ஆனால் மருத்துவர்கள் இப்போது முற்றிலும் ஓய்வில் இருக்குமாறு எனக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: நிஜ வாழ்க்கைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.. சர்தார் 2 படம் குறித்து சொன்ன சூர்யா!

மேலும், பயணம் செய்தால் உடல் வலி மற்றும் ஒவ்வாமை ஏற்படும் என்பதால், எந்தச் சூழ்நிலையிலும் நான் பயணம் செய்யக்கூடாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தனக்கு வேறு வழியில்லை என்றும், எப்படியும் வந்திருப்பேன்” என்றும் மமிதா பைஜு கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மாமிதாவின் நிலை குறித்து ரசிகர்களின் கருத்து:

மேலும் இந்த வீடியோவில் கீழ் ரசிகர்கள், மமிதா ஒரே ஆண்டில் 3 ரூ 200 கோடி ஹிட் படங்களை கொடுத்துள்ள, அதனால் அவருக்கு கண்ணு பட்டிருக்கும் என கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகிவருகிறது.

Follow Us