AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Mamitha Baiju: போர் தொழில் படத்தை காட்டிலும் கர படம் வித்தியாசமாக இருக்கும் – மமிதா பைஜூ!

Mamitha Baiju About Vignesh Raja: மலையாள சினிமாவில் இருந்து, தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகியாக கலக்கிவருபவர் மமிதா பைஜூ. இவர் கர என்ற படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார். அந்த விதத்தில் கர படம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து மமிதா பைஜூ தெரிவித்துள்ளார்.

Mamitha Baiju: போர் தொழில் படத்தை காட்டிலும் கர படம் வித்தியாசமாக இருக்கும் – மமிதா பைஜூ!
மமிதா பைஜூவின் கர திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 24 Apr 2026 15:16 PM IST

தென்னிந்திய சினிமாவில் பரபரப்பு நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் மமிதா பைஜூ (Mamitha Baiju). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் தயாராகிவருகிறது. அந்த வகையில் இவர் மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் படங்களில் நடித்துவருகிறார். அந்த வகையில் இவரின் நடிப்பில் வெளியாக தயாராகியுள்ள படம்தான் கர (Kara). இந்த படத்தில் தனுஷ் (Dhanush) ஆக்ஷன் நயாகனாக நடித்திருக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். இந்த படத்தை போர் தொழில் என்ற படத்தை இயக்கியிருந்த இயக்குநர் விக்னேஷ் ராஜா (Vignesh Raja) இயக்கியுள்ளார். இப்படத்தில் தனுஷ் இதுவரையிலும் நடித்திடாத மிகவும் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளார்.

அந்த வகையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த மமிதா பைஜூ, கர படமானது எவ்வாறு அமைந்திருக்கும் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மதுரை மக்களே ரெடியா இருக்கீங்களா? – வைரலாகும் ஆர்.ஜே.பாலாஜி எக்ஸ் பதிவு

கர திரைப்படம் குறித்து பேசிய நடிகை மமிதா பைஜூ:

அந்த நேர்காணலில் மமிதா பைஜூ பேசுகையில், “இயக்குநர் விக்னேஷ் ராஜா சாருக்கு, ஒரு கதாபாத்திரத்தை உள்வாங்கி அதற்கேற்ப தன்னை மேன்படுத்தி கொள்வார். மேலும் அவர், நடிகர்கள் ஒரு கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளை உள்வாங்கி அதை எவ்வாறு வெளிப்படுத்தவேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார். மேலும் ஒருவருக்கு இந்த கதாபாத்திரத்தை கொடுக்கலாமா?, அவரிடம் இருந்து அந்த அந்த கதாபாத்திரத்திற்காக நடிப்பை எவ்வாறு வாங்கவேண்டும் என்பது அவருக்கு தெளிவாக தெரியும்.

இதையும் படிங்க: தனுஷ் சாருக்கு மிகவும் சவாலான கதாப்பாத்திரம் அதுதான் என்றார் – இயக்குநர் விக்னேஷ் ராஜா ஓபன் டாக்

மேலும் ஷூட்டிங் செல்வதற்கு முன்பே ஒரு முன்னோட்டத்தை பார்ப்பார். அவர் நம்மிடமிருந்து எவ்வாறு உணர்ச்சிகள் வெளிவருகிறது என்பதை காண்பதில் தெளிவாக இருப்பார். மேலும் அவரின் போர் தொழில் படத்தை காட்டிலும், கர படமானது முற்றிலும் வித்தியாசமானது. கர படமானது முழுக்க எமோஷனல் கதைக்களம் கொண்ட படமாக இருக்கும்” என அதில் அவர் கூறியிருந்தார்.

கர திரைப்படம் குறித்து மமிதா பைஜூ வெளியிட்ட பதிவு:

தனுஷின் கர படமானது வரும் 2026ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதியில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. அந்த வகையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. 2026ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் தனுஷிற்கு இப்படம் வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us