நடிகர் யாஷின் டாக்ஸிக் படத்தின் பிடிஎஸ் புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு
Actor Yash Toxic Movie BTS Photos Viral On Social Media: கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் யாஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் டாக்ஸிக். இந்தப் படத்தின் பிடிஎஸ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கன்னட சினிமாவில் சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவர் நடிகர் யாஷ். சீரியல்கள் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான நடிகர் யாஷ் அதனைத் தொடர்ந்து வெள்ளித்திரையில் படங்களில் நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து சீரியலில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த பிறகு நடிகர் யாஷின் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து இவர் நாயகனாக நடித்த படங்கள் கன்னட சினிமா ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெறத் தொடங்கியது. மேலும் இவர் அதிக அளவில் படங்களில் நடித்து இருந்தாலும் உலக அளவில் யாஷை பிரபலமாக்கியது கேஜிஎஃப் படம் தான். இந்தப் படம் கன்னட சினிமாவில் உருவாகி திரையரங்குகளில் வெளியான பிறகு நடிகர் யாஷிற்கு மட்டும் இன்றி கன்னட சினிமாவிற்கும் அடுத்தக்கட்ட உயற்விற்கு காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகமும் திரையரங்குகளில் வெளியான போது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து இந்தப் படத்திற்கு பிறகு நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் டாக்ஸிக். இந்தப் படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
டாக்ஸிக் படத்தின் பிடிஎஸ் புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு:
அதன்படி இந்தப் டாக்ஸிக் படம் ஆங்கிலம் மற்றும் கன்னட மொழியில் உருவாகி உள்ளது. இந்தப் படம் ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள நிலையில் படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வகையில் இந்த டாக்ஸிக் படத்தில் சண்டை பயிற்சியாளர் ஜேஜே பெரி உடன் படக்குழுவினர் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. ஹாலிவுட்டில் சண்டை பயிற்சியாளராக இருக்கும் பெரி இந்தப் படத்திற்கு சண்டைக் காட்சிகள் அமைத்து இருப்பதால் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… No Need என்று சொன்னாரா அஜித்? என்ன நடந்தது – முழு விவரம் இதோ!
டாக்ஸிக் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Some behind-the-scenes glimpses of our action maestro #JJPerry from the sets of #Toxic#ToxicTheMovie #ToxicOnJune4th pic.twitter.com/kmz8zpTO4A
— TOXIC (@Toxic_themovie) April 23, 2026
Also Read… தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த பிரபல மலையாள நடிகர்



