AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த பிரபல மலையாள நடிகர்

Actor Dulquer Salmaan Cast Vote in TN Assembly elections: மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவரது பூர்வீகம் கேரளாவாக இருந்தாலும் முழுவதுமாக தமிழகத்திற்கு இவர் குடிபெயர்ந்துள்ளார் என்பது இன்றைய சட்டமன்ற தேர்தலில் அவர் வாக்களித்ததன் மூலம் தெரிய வந்துள்ளது.

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த பிரபல மலையாள நடிகர்
துல்கர் சல்மான்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 23 Apr 2026 13:51 PM IST

மலையாள சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி. இவரது மகன் துல்கர் சல்மானும் முன்னனி நடிகராக உள்ளார். இவர் மலையாள சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி இருந்தாலும் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். எந்த மொழியில் நடிகர் துல்கர் சல்மான் நடித்தாலும் அந்தப் படங்கள் பான் இந்திய அளவில் மாபெரும் வெற்றியைப் பெற்று வருகின்றது. மேலும் நடிகர் துல்கர் சல்மானின் கதை தேர்வில் ரசிகர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருப்பதன் காரணமாக இவரது படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. தொடர்ந்து பான் இந்திய மொழிகளில் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் துல்கர் சல்மான் தற்போது ஐ அம் கேம் என்ற படத்தில் பிசியாக நடித்து வருகிறார். மலையாளத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.

மேலும் சினிமாவில் படங்களில் நடிப்பது மட்டும் இன்றி தொடர்ந்து வேஃபரர் ஃபிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் படங்களை தயாரித்தும் வருகிறார் நடிகர் துல்கர் சல்மான். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது போல தயாரிப்பில் வெளியாகும் படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

சென்னையில் வாக்களித்த நடிகர் துல்கர் சல்மான்:

இந்த நிலையில் கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நடிகர் துல்கர் சல்மான் கடந்த 9-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு கேரள மாநிலத்தில் நடைப்பெற்ற சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த புகைப்படத்தை போடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருந்தனர். ஆனால் அன்று முழுவதுமே துல்கர் சல்மான் வாக்களித்ததற்கான வீடியோ அல்லது புகைப்படம் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் அவரது தந்தை நடிகர் மம்முட்டி மற்றும் தாய் இருவரும் வாக்களித்த வீடியோ வெளியாகி இருந்தது.

ஆனால் இன்று 23-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வாக்களித்துள்ளார். மேலும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் துல்கர் சல்மான் முழுவதுமாக தமிழகத்திற்கு குடிபெயர்ந்துவிட்டாரா என்று ஆச்சரியமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Also Read… நெருங்காதே பெண்ணே எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும் – 15 ஆண்டுகளை நிறைவு செய்தது ஜீவாவின் கோ படம்!

இணையத்தில் வைரலாகும் போட்டோ:

Also Read… கவினின் புதிய படத்தை இயக்கும் அறிமுக இயக்குநர் – அப்டேட் இதோ!

Follow Us