AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அட எல்லாருமே சீரியல் நடிகர்களா? பிக் பாஸ் 10ல் கலந்துகொள்ளும் ஆண் போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா?

Bigg Boss 10 Male Contestants: தமிழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெரும் ரியாலிட்டி நிகழ்ச்சிதான் பிக் பாஸ். தமிழில் வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதியில், பிக் பாஸ் சீசன் 10 தொடங்கவுள்ள நிலையில், இந்த போட்டியில் கலந்துகொள்ளும் சீரியல் நடிகர்கள் மற்றும் ஆண் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

அட எல்லாருமே சீரியல் நடிகர்களா? பிக் பாஸ் 10ல் கலந்துகொள்ளும் ஆண் போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா?
பிக் பாஸ் 10 ஆண் போட்டியாளர்கள்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 01 Sep 2026 15:35 PM IST

விஜய் தொலைக்காட்சியில் ஆண்டுதோறும் ஒளிபரப்பப்பட்டுவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானதுதான் பிக் பாஸ் (Bigg Boss). இந்த நிகழ்ச்சியானது உலகநாயகன் கமல்ஹாசன் (Kamal Haasan) தொகுக்க, கடந்த 2017ம் ஆண்டில் தமிழில் தொடங்கியது. இந்த பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி மிகவும் மக்களிடையே பிரபலமானது. அந்த விதத்தில் பின் பிக் பாஸ் சீசன் 8-லிருந்து விஜய் சேதுபதி தொகுக்க தொடங்கியிருந்தார். இதுவரை மொத்தம் 9 சீசன்கள் தமிழில் ஒளிபரப்பாகிவருகிறது. இதில் இறுதியாக வெளியான பிக் பாஸ் சீசன் 9ல் வெற்றியாளராக வைல்ட்கார்ட் என்ட்ரி கொடுத்த சீரியல் நடிகை திவ்யா கணேஷ் டைட்டில் வின்னரானார். இதன் பின் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது, வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 06ம் தேதியில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் யார் யார் பங்கேற்கிறார்கள், எந்தெந்த போட்டியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள் என இணையத்தில் பேசப்பட்டுவருகிறது. அந்த வரிசையில், பிக் பாஸ் சீசன் 10ல் கலந்துகொள்ளும் சீரியல் ஆண் நடிகர்கள் யார் யார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இதையும் படிங்க: என் இயக்குநர் மிகவும் கண்டிப்பானவர்.. தர்மன் பட ஷூட்டிங் குறித்து ராஷி கன்னா!

பிக் பாஸ் சீசன் 10ல் கலந்துகொள்ளும் ஆண் போட்டியாளர்கள் லிஸ்ட்:

விஜய் சேதுபதி தொகுக்கும் சிறப்பான நிகழ்ச்சியாக பிக் பாஸ் உள்ளது. தற்போது பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தொடங்கவுள்ள நிலையில், இதில் யார் யார் கலந்துகொள்கிறார்கள் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் பரவிவருகிறது. இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில், சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் குமார், நடிகை ஷபானாவின் கணவரும், நடிகருமான ஆர்யன், ஈரமான ரோஜாவே சீரியல் நடிகர் வினோத் பாபு, சீரியல் நடிகர் புவியரசு போன்ற நடிகர்கள் கலந்துகொள்கிறார்களாம்.

இதையும் படிங்க: நிஜ வாழ்க்கைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.. சர்தார் 2 படம் குறித்து சொன்ன சூர்யா!

மேலும் பார்கவ் ராம், இன்ஸ்டா பிரபலம் ராஜ்பிரியம், டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் மேலும் விமர்சகர் பிரசாந் போன்ற பிரபலங்கள் கலந்துகொள்வதாக கூறப்படுகிறது. இதில் எந்தெந்த பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

பிக் பாஸ் சீசன் 10 குறித்து வெளியான புரோமோ வீடியோ பதிவு:

இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 06ம் தேதியில் தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சி மாலை 6 மணி முதல் விஜய் டிவி மற்றும் ஜியோ ஹார் ஸ்டாரின் ஒளிபரப்பாகிறது. மேலும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் 24/7மணிநேரமும் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us