AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Bigg Boss: நான்கு சூப்பர் ஸ்டார்ஸ்.. நான்கு வீடுகள்.. நான்கு மொழியில் ஒரே நாளில் தொடங்கும் பிக் பாஸ் – வைரலாகும் புரோமோ!

Bigg Boss Season South India: தென்னிந்திய மொழிகளில் ஸ்டார் குழுமங்களில் நடத்தப்பட்டுவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிதான் பிக் பாஸ். இந்த 2026ம் ஆண்டில் பிக் பாஸ் நிகழ்ச்சியானது சிறப்பாக ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், நான்கு சூப்பர்ஸ்டார்ஸ் தொகுக்கும் இந்த நிகழ்ச்சியானது ஒரே நாளில் தொடங்குவதாக புரோமோ வெளியிடப்பட்டுள்ளது.

Bigg Boss: நான்கு சூப்பர் ஸ்டார்ஸ்.. நான்கு வீடுகள்.. நான்கு மொழியில் ஒரே நாளில் தொடங்கும் பிக் பாஸ் – வைரலாகும் புரோமோ!
தென்னிந்திய பிக் பாஸ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 31 Aug 2026 15:15 PM IST

ஆங்கிலத்தில் பிக் பிரதர் (Big Brother) என்ற நிகழ்ச்சியின் தழுவலாக, இந்தியாவில் நடத்தப்பட்டுவரும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிதான் பிக் பாஸ் (Bigg Boss). இந்த நிகழ்ச்சியானது இந்தியாவில் ஆரம்பத்தில், 2006ம் ஆண்டில் இந்தி மொழியில் தொடங்கப்பட்டது. தற்போது இந்தியில் இந்த நிகழ்ச்சியானது கிட்டத்தட்ட 10 சீசன்களை கடந்துள்ளது. ஆனால் தமிழில் கடந்த 2017ம் ஆண்டிலே தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை சீசன் 7 வரை கமல்ஹாசன் தொகுத்த நிலையில், சில காரணங்களால் அவர் விலகிவிட்டார். இதற்கு பின் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) இந்த நிகழ்ச்சியை தொகுத்துவருகிறார். இந்நிலையில் தமிழில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது விரைவில் தொடங்கவுள்ள நிலையில், தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளிலும் ஒரே நாளிலே தொடங்கவுள்ளதாம்.

வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 06ம் தேதியில் இந்நிகழ்ச்சி பிரம்மாண்டமாக ஆரம்பமாகும் நிலையில், ஒரே நேரத்தில் நான்கு மொழிகளில் தொடங்குகிறது. இது தொடர்பான நகைச்சுவையான புரோமோவை பிக் பாஸ் குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: ஜீவாவின் தகப்பன் படத்தின் ஷூட்டிங் ஓவர் – கொடுத்ததுடன் வெளியான வீடியோ!

தென்னிந்தியாவில் நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் பிக் பாஸ் தொடங்குவது குறித்து வெளியான புரோமோ பதிவு:

தென்னிந்திய பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுக்கும் தொகுப்பாளர்கள்:

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை மக்கள் செல்வன் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக தொகுத்துவருகிறார். மேலும் மூன்றாவது ஆண்டாக பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியை தொகுக்கிறார். மலையாளத்தில் ஏற்கனவே தெரிந்தவர்தான், நடிப்பின் நாயகன் மோகன்லால் இந்நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து தொகுத்து வழங்கிவருகிறார்.

இதையும் படிங்க: இது நடக்கவே நடக்காது என்ற விஷயத்தை கூட அஜித் மற்றும் விஜய் சார் நடத்தி காட்டுவார்கள் – ஓபனாக பேசிய ஜி.வி. பிரகாஷ்!

கன்னடத்தில் கிச்சு சுதீப் தொகுத்து வழங்குகிறார். மேலும் தெலுங்கில் கிங் நாகார்ஜுனா தொகுத்து வழங்குகிறார். இவர்கள் நால்வருமாறாக் இணைந்திருக்கும் புரோமோ தற்போது வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், இணையத்தில் வைரலாகிவருகிறது.

பிக் பாஸ் சீசன் 10 தமிழை எதில் பார்க்கலாம்:

பிக் பாஸ் நிகழ்ச்சியானது தமிழில் விஜய் தொலைக்காட்சியில் வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி முதல் நேரடியாக ஒளிபரப்பாகிறது. அதன் பிறகு தினமும் 1 மணிநேரம் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் ஆனால் இந்நிகழ்ச்சியை 24/7 மணி நேரமும், ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் கண்டுகளிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us