AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இது நடக்கவே நடக்காது என்ற விஷயத்தை கூட அஜித் மற்றும் விஜய் சார் நடத்தி காட்டுவார்கள் – ஓபனாக பேசிய ஜி.வி. பிரகாஷ்!

GV Prakash On Ajith-CM Vijay: இசையமைப்பாளராகவும், சினிமாவில் நாயகனாகவும் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவரின் நடிப்பில், வரும் 2026ம் ஆண்டு செப்டம்பரில் இம்மார்ட்டல் என்ற படமானது வெளியாக காத்திருக்கிறது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஜி.வி.பிரகாஷ், அஜித் மற்றும் முற்போக்கு சிந்தனைகள் குறித்து பேசியுள்ளார்.

இது நடக்கவே நடக்காது என்ற விஷயத்தை கூட அஜித் மற்றும் விஜய் சார் நடத்தி காட்டுவார்கள் – ஓபனாக பேசிய ஜி.வி. பிரகாஷ்!
அஜித், ஜி.வி. பிரகாஷ் மற்றும் விஜய்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 31 Aug 2026 11:33 AM IST

தென்னிந்திய மொழி திரைப்படங்களில் இசையமைப்பாளராக இசையமைத்து, சூப்பர் ஹிட் பாடல்களை வழங்கிவருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார் (GV Prakash). இவர் ஹீரோவாக படங்களில் நடித்துவரும் நிலையில், இதுவரை மொத்தம் 26-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான திரைப்படம் என்றால் அது ஹேப்பி ராஜ் (Happy Raj). கடந்த 2026 மார்ச் இறுதியில் வெளியான இப்படமானது சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பின், இந்த ஆண்டில் 2வதாக வெளியாகி காத்திருக்கும் படம்தான் இம்மார்ட்டல் (Immortal). அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா (Mariyappan Chinna) இயக்க, ஜி.வி.பிரகாஷ் மற்றும் கயாடு லோஹர் (Kayadu Lohar) இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

அதை தொடர்ந்து இப்படத்தின் விளம்பரப் பணிகளும் வெகு தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் ஜி.வி.பிரகாஷ் குமார் கலந்துகொண்டார். அதில் அஜித் மற்றும் முதல்வர் விஜய்யின் சாதனைகள் மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்கான சிந்தனைகள் குறித்து பேசியுள்ளார்.

இதையும் படிங்க: விக்ரம் பிரபு படத்தில் நடிகையாக அறிமுகமாகும் அமலா ஷாஜி..!

முதல்வர் விஜய் மற்றும் அஜித் குமார் குறித்து ஜி.வி.பிரகாஷ் குமார் பகிர்ந்த விஷயம்:

அந்த நேர்காணலில் பேசிய ஜி.வி. பிரகாஷ், “ஒரு இடத்தில் பீக்கில் இருந்துவிட்டு, மற்றொன்றை தேடி போவது, அஜித் சாராக இருக்கட்டும், விஜய் சாராக இருக்கட்டும். இது நடக்கவே நடக்காது என நினைத்ததை கூட நடத்தி காட்டிவிட்டார்கள். இதிலிருந்து நாம் ஒரு நல்ல விஷயத்தை எடுத்துக்கொள்ளலாம்.

இதையும் படிங்க: ஜீவாவின் தகப்பன் படத்தின் ஷூட்டிங் ஓவர் – கொடுத்ததுடன் வெளியான வீடியோ!

ஒரே இடத்தில், ஒரே மாதிரியான கட்டமைப்பில் பாதுகாப்பு வளையத்திற்குள்ளே இருக்கவேண்டும் என நினைப்பதை, இவர்கள் இருவருமே பண்ணவே இல்லை. அதை நானும் நினைக்கிறேன். இதை இவர்களிடமிருந்து ஒரு பெரிய உத்வேகமாக நானும் எடுத்துக்கொள்கிறேன். விஜய் சார் மற்றும் அஜித் சார், அவர்கள் தேர்ந்தெடுத்த பாதைகளில் வெற்றியை பெற்றுவிட்டார்கள்” என அதில் அவர் ஓபனாக பேசியிருந்தார்.

இம்மார்ட்டல் திரைப்படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் குமார் வெளியிட்ட பதிவு:

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள இம்மார்ட்டல் படமானது, காதல் மற்றும் ஹாரர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. வாம்பயர் கதையில் இது அமைந்திருக்கும் நிலையில், நிச்சயம் வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த விதத்தில், இப்படம் 2026ம் ஆண்டு செப்டம்பர் 04ம் தேதியில் வெளியாக காத்திருக்கும் நிலையில், படத்தின் புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

Follow Us