AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

2 படங்களில் விஜய் சாருடன் பணியாற்றும் வாய்ப்பு தவறியது – ஜிவி பிரகாஷ் குமார் ஓபன் டாக்

GV Prakash Kumar | தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ் குமார். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் நடிகர் தளபதி விஜய் உடன் பணியாற்றும் வாய்ப்பு 2 முறை தவறியது குறித்து பேசியுள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது.

2 படங்களில் விஜய் சாருடன் பணியாற்றும் வாய்ப்பு தவறியது – ஜிவி பிரகாஷ் குமார் ஓபன் டாக்
தளபதி விஜய் உடன் ஜிவி பிரகாஷ் குமார்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 30 Aug 2026 10:49 AM IST

தமிழ் சினிமாவில் உச்சத்தில் அதிக சம்பளம் வாங்கும் நாயனாக வலம் வந்தவர் நடிகர் தளபதி விஜய். இவர் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே தன்னை சினிமாவில் இந்த இடத்திற்கு கொண்டு அமர்த்திய தமிழக மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்று நினைத்து தமிழக அரசியலில் கலம் இறங்கினார். இதன் காரணமாக இனி படங்களில் நடிக்க போவதில்லை என்று அவர் வெளிப்படையாக தெரிவித்துவிட்டார். இந்த நிலையில் நடிகர் தளபதி விஜய் தமிழ்நாட்டில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியது மட்டும் இன்றி போட்டியிட்ட முதல் சட்டமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்ற ஆட்சி அமைத்தார். தற்போது முதலமைச்சராக பணியாற்றி வருகிறார். இவரது நடிப்பு மட்டும் இன்றி அரசியல் செய்யும் விதத்தையும் பார்த்து மக்களும் பிரபலங்களும் தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகராக தளபதி விஜய் நடித்துக்கொண்டு இருந்த போது அவருடன் பணியாற்றும் வாய்ப்பை தவரவிட்ட திரையுலக பிரபலங்கள் தொடர்ந்து அது குறித்து பேட்டிகளில் பேசி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் ஜிவி பிரகாஷ் குமாரும் தனது பேட்டி ஒன்றில் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதன்படி ஜிவி பிரகாஷ் குமார் அளித்தப் பேட்டியில் பேசியதாவது, சுதா கொங்கரா இயக்கத்தில் விஜய் சார் நடிக்கும் ஒரு படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு எனக்கு இருந்தது. ஆனால், அது கைநழுவிப் போனது. அதேபோல, வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சார் நடிக்கவிருந்த மற்றொரு பட வாய்ப்பையும் நான் தவறவிட்டேன். அந்த இரண்டு படங்களின் கதைகளுமே மிகச் சிறப்பாக இருந்தன.

சுதா கொங்கராவுடனான அந்தத் திட்டத்தை முடிக்க சுமார் ஒரு வருடம் தேவைப்பட்டிருக்கும் என்பதால் அது சாத்தியமாகாமல் போனது. அந்தத் தேதிகளைக் (call sheet) கொண்டு, இறுதியில் விஜய் சார் பீஸ்ட் படத்திற்காக நெல்சனுடன் இணைந்தார் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Samantha: அந்த காட்சிகளுக்கு நான் நோ சொன்னதே இல்ல – சமந்தா!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… மண்டாட்டி பட ஷூட்டிங்கில் நடந்த சம்பவம்… கலகலப்பாக பேசிய சூரி

Follow Us