AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனாவின் ரணபாலி ரிலீஸ் தேதி இதுதான்… வெளியானது அப்டேட்

Ranabaali Movie Release Date Update | தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகர்களாக வலம் வரும் நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பில் உருவாகி வரும் ரணபாலி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது வைரலாகி வருகின்றது.

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனாவின் ரணபாலி ரிலீஸ் தேதி இதுதான்… வெளியானது அப்டேட்
ரணபாலிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 27 Aug 2026 12:24 PM IST

தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவரது நடிப்பில் தெலுங்கு மொழியில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கிங்டம். கடந்த 2025-ம் ஆண்டில் தெலுங்கு சினிமாவில் உருவாகி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தேவரகொண்டா தனது அடுத்தடுத்தப் படங்களில் பிசியாக கமிட்டாகி நடித்து வந்தார். அதே வேலையில் தன்னுடன் நடித்த நடிகை ராஷ்மிகா மந்தனாவை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்துக்கொண்டார். தெலுங்கு சினிமாவில் முன்னணியில் இருக்கும் இவர்கள் இருவரும் இணைந்ததை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

தொடர்ந்து நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் தெலுங்கு சினிமாவில் வெளியான படங்களை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்த நிலையில் தற்போது அவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் ரணபாலி. இந்தப் படம் அவர்களின் திருமணத்திற்கு முன்னதாகவே தொடங்கப்பட்டு தற்போது வெளியீட்டிற்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனாவின் ரணபாலி ரிலீஸ் தேதி இதுதான்:

இந்த ரணபாலி படத்தை இயக்குநர் ராகுல் சங்கிருத்யன் எழுதி இயக்கி உள்ள நிலையில் நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா உடன் இணைந்து நடிகர்கள் அர்னால்ட் வோஸ்லூ, லூக் மெக்கிப்னி மற்றும் விளாடிமிர் ஏஞ்சலோவ் ஆகியோ முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது வெளியீட்டிற்கு ஆயத்தமாகி வருகின்றது. இந்த நிலையில் ரணபாலி படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி படம் வருகின்ற 16-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… ஹாய் படத்தின் டிக்கெட் முன்பதிவை தொடங்கியது படக்குழு!

ரணபாலி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… தனது அடுத்தடுத்தப் படங்கள் குறித்து அப்டேட் கொடுத்த ரஜினிகாந்த் – வைரலாகும் வீடியோ

Follow Us