AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஹாய் படத்தின் டிக்கெட் முன்பதிவை தொடங்கியது படக்குழு!

Hi Movie Ticket Bookin Open Now | நடிகர்கள் கவின் மற்றும் நயன்தாரா நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஹாய். இந்த ஹாய் படத்தின் டிக்கெட் முன்பதிவை படக்குழு தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

ஹாய் படத்தின் டிக்கெட் முன்பதிவை தொடங்கியது படக்குழு!
ஹாய்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 26 Aug 2026 15:48 PM IST

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் கவின் (Actor Kavin). இவரது நடிப்பில் கடந்த 2025-ம் ஆண்டு அடுத்தடுத்து இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியானது. அந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் கவின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தற்போது உருவாகி உள்ள படம் ஹாய். இந்தப் படத்தினை இயக்குநர் விஷ்ணு எடவன் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா நாயகியாக நடித்து உள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.

தொடர்ந்து இந்த ஹாய் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அதன்படி படக்குழுவினர் பல பேட்டிகளில் படம் குறித்தும் படத்தின் கதை எப்படி இருக்கும் என்பது குறித்தும் வெளிப்படையாக பேசி வருகின்றனர். இந்த படத்தினை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் தயாரிப்பு நிறுவனமான ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளனர்.

ஹாய் படத்தின் டிக்கெட் முன்பதிவை தொடங்கியது படக்குழு:

படம் வருகின்ற 28-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் திரையரங்குகலில் வெளியான இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் படத்தின் டிக்கெட் முன்பதிவை படக்குழு தொடங்கி உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் படத்தின் ட்ரெய்லர் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… தி பாரடைஸ் படத்தின் 2-வது சிங்கிள் ரிலீஸ் எப்போது? வைரலாகும் அப்டேட்

ஹாய் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Yash: இது உங்களுக்கான ஒரு விருந்து.. டாக்ஸிக் திரைப்படம் பற்றி பகிர்ந்த யாஷ்!

Follow Us