உலகம் முழுவதும் பெத்தலேக குடும்ப யூனிட் படத்தை தமிழில் வெளியிடும் படக்குழு – வைரலாகும் பதிவு
Bethlehem Kudumba Unit tamil version update | மலையாள சினிமாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் பெத்தலேக குடும்ப யூனிட் படத்தின் தமிழ் வெர்ஷன் எப்போது வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் சினிமா ரசிகர்கள் தொடர்ந்து தமிழ் படங்களை மட்டும் இன்றி மற்ற மொழிப் படங்களையும் தற்போது அதிக அளவில் திரையரங்குகளுக்கு சென்று பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது. அதிலும் அதிகமாக மலையாலம் மற்றும் தெலுங்கு மொழிப் படங்கள் மீது தமிழ் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றது. இந்த நிலையில் மலையாள சினிமாவில் சமீப காலமாக திரையரங்குகளில் வெளியாகும் படங்களுக்கு தமிழ் நாட்டிலும் அதிக திரைகள் ஒதுக்கப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், துல்கர் சல்மான், நிவின் பாலி ஆகியோரின் படங்களுக்கு தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பு இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாள சினிமாவில் வெளியான படம் பெத்தலேக குடும்ப யூனிட்.
இயக்குநர் கிரிஷ் ஏடி எழுதி இயக்கி உள்ள இந்தப் படத்தில் நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடித்து உள்ளார். இந்த 2026-ம் ஆண்டில் நடிகை மமிதா பைஜூ நடிப்பில் திரையரங்குகளில் வெளியான 4-வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இவரது நடிப்பில் வெளியான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில் இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
பெத்தலேக குடும்ப யூனிட் படத்தை தமிழில் வெளியிடும் படக்குழு:
இந்த நிலையில் கடந்த 21-ம் தேதி ஆகஸ்ட் மாதம் மலையாள மொழியில் வெளியான இந்த பெத்தலேக குடும்ப யூனிட் படத்தை தமிழ் மொழியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி பெத்தலேக குடும்ப யூனிட் படத்தின் தமிழ் வெர்ஷனை வருகின்ற 04-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.
Also Read… ரஜினிகாந்தின் பயோகிராஃபி எந்த நிலையில் உள்ளது? சௌந்தர்யா ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்
நடிகர் நிவின் பாலி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Vanakkam Tamilnadu! ❤️
We are thrilled to announce that the most loved BETHLEHEM KUDUMBA UNIT is releasing worldwide in TAMIL on 4th SEPTEMBER .
FUTURE RUNUP FILMS is bringing this beautiful story to you with lots of love.
See You Soon !@_mamithabaiju @BhavanaStudios… pic.twitter.com/5sMqYQFKDu
— Nivin Pauly (@NivinOfficial) August 24, 2026
Also Read… துருவ் விக்ரம் குரலில் வெளியாகும் ஹாய் படத்தின் குடிகார நெஞ்சு பாடல்



