கார் ரேஸில் விபத்து… நடிகர் அஜித் குமாருக்கு என்ன ஆச்சு? வைரலாகும் வீடியோ
Ajith Kumar Involved in a Racing Accident | தொடர்ந்து கார் ரேஸிங்கில் அதிக கவனம் செலுத்தி வரும் நடிகர் அஜித் குமார் சமீபத்தில் லீ மேன்ஸ் கார் பந்தயமத்தில் கலந்துகொண்ட போது அவரது கார் விபத்தில் சிக்கியது. அந்த விபத்து தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக வலம் வரும் நடிகர் அஜித் குமாருக்கு ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தே தொடர்ந்து கார் ரேஸிங்கில் அதிக ஆர்வம் உள்ளது. இவர் எந்த அளவிற்கு படத்தில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறாரோ அதே அளவிற்கு தனது ரேஸிங்கிலும் அதிக கவனத்தை காட்டி வருகிறார். நடிகர் அஜித் குமார் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் பைக் ரேஸிங்கிலும் கவனம் செலுத்தி வந்த நிலையில் தற்போது முழுவதுமாக கார் ரேஸிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகர் அஜித் குமார் கார் ரேஸிங்கில் கலந்துகொண்டு பல வெற்றிகளைப் பெற்று இந்தியாவிற்கே பெருமை சேர்த்து வருகிறார். கடந்த 2025-ம் ஆண்டில் அடுத்தடுத்து அஜித் குமார் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியானது.
இவரது நடிப்பில் படம் திரையரங்குகளில் வெளியாகி ஒரு ஆண்டை கடந்த நிலையில் அடுத்தப் படத்திற்கு டேர் டெவில் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ள நிலையில் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.




கார் ரேஸில் விபத்து… நடிகர் அஜித் குமாருக்கு என்ன ஆச்சு?
இந்த நிலையில் தற்போது அதிக அளவில் நடிகர் அஜித் குமார் தனது கார் ரேஸிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் லீ மேன்ஸ் கார் பந்தயமத்தில் கலந்துகொள்வதற்காக பயிற்சி மேற்கொண்ட போது அஜித் குமாரின் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இந்த கார் விபத்தில் நடிகர் அஜித் குமார் நல்வாய்ப்பாக எந்த காயமும் இன்றி தப்பியதாக செய்திகள் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் கார் விபத்தில் சிக்கிய வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read… ராம் அண்ட் லீலா படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியானது!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#AjithKumar Involved in a Racing Accident :
Actor Ajith Kumar was involved in an accident after losing control of his car during the Michelin Le Mans Cup race currently taking place in Europe.
Thankfully, Ajith escaped completely unhurt, with no injuries reported. He is said to… pic.twitter.com/JwXq1EsJ9M
— FilmyBowl Tamil (@FilmyBowlTamil) August 23, 2026
Also Read… டிசி படத்தில் பார்வதியின் கேரக்டரை அப்படி காட்ட விரும்பினேன் – இயக்குநர் அருண் மாதேஸ்வரன்!