Toxic: யாஷின் டாக்ஸிக் பட டிக்கெட் புக்கிங் எப்போது தொடக்கம்? – அறிவிப்பு இதோ!
Toxic Film Pre-Booking: பான் இந்திய பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகியிருப்பது டாக்ஸிக். நடிகர் யாஷ், நயன்தாரா போன்ற பல்வேறு நடிகர்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படம், 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதியில் வெளியாகிறது. அதை முன்னிட்டு இப்படத்தின் டிக்கெட் புக்கிங் எப்போது தொடங்குகிறது என்பது குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
தென்னிந்திய சினிமா முதல் வட இந்திய சினிமா ரசிகர்கள் வரும் கொண்டாடும் நாயகனாக இருந்துவருபவர் ராக்கிங் ஸ்டார் யாஷ் (Yash). இவரின் நடிப்பில் கன்னட மொழியில் பல படங்கள் வெளியானாலும், அவருக்கு மக்களிடையே சிறப்பான வரவேற்பை கொடுத்த திரைப்படங்கள் கேஜிஎப் 1 (KGF 1&2) மற்றும் 2 படங்கள் மட்டுமே. அதற்கு முன் வெறும் கன்னட சினிமாவில் புகழ்பெற்றவராக இருந்தவர், இந்த இரு படங்களுக்கும் பின் தென்னிந்திய சினிமா முதல் வட இந்திய சினிமா வரையிலும் பிரபலமானார். இப்படங்களை அடுத்ததாக இவரின் நடிப்பில், உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படம்தான் டாக்ஸிக் (Toxic). இதை மலையாள பெண் இயக்குநர் கீது மோகன்தாஸ் (Geetu Mohandas) இயக்க, ஜன நாயகன் பட தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணா மற்றும் யாஷின் மாஸ்டர் மைண்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.
இப்படம் கிட்டத்தட்ட ரூ 600 முதல் 800 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இப்படத்தின் டிக்கெட் புக்கிங் எப்போது தொடங்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க: காதலிச்சு கல்யாணம் பண்ணனும்.. இல்ல கல்யாணம் பண்ணிட்டு காதலிக்கும்.. நயன்தாரா – கவினின் ஹாய் பட ட்ரெய்லர் வெளியானது!
யாஷின் டாக்ஸிக் பட டிக்கெட் ப்ரீ புக்கிங் எப்போது:
யாஷ் நடித்துள்ள பான் இந்திய படமான டாக்ஸிக, ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இப்படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில தினங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இப்படத்தின் டிக்கெட் ப்ரீ புக்கிங் வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதியில் தொடங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. உலகமெங்கும் இதே நாளில் தொடங்கும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: சாய் அபயங்கரின் 6வது இண்டீ பாடலில் இணைந்த நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ்!
டாக்ஸிக் திரைப்படத்தின் டிக்கெட் ப்ரீ புக்கிங் தொடக்கம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Baddies…and The Daddy – Taking over in 6 Days! 💥❤️🔥#Toxic: A Fairy Tale for Grown-Ups In Cinemas Worldwide from 26.08.2026.
Nationwide Bookings open Tomorrow! 🔥#ToxicTheMovie #ToxicOn26thAug@TheNameIsYash #Nayanthara @advani_kiara #TaraSutaria @rukminitweets… pic.twitter.com/BHUxxiSbX0
— KVN Productions (@KvnProductions) August 20, 2026
யாஷின் இந்த டாக்ஸிக் திரைப்படத்தில், அவருடன் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த், தாரா சுதாரியா மற்றும் பல்வேறு நட்சத்திர நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தில் யாஷ் மொத்தமாக 3 வேடத்தில் நடித்திருப்பதாக இணையத்தில் தகவல்கள் பரவிவருகிறது. ஆனால் மொத்தம் 2 வேடத்தில் நடித்திருப்பதாக மட்டுமே படக்குழு கூறியுள்ளது. 2026ம் ஆனது ஆகஸ்ட் 26ம் தேதியில் இந்திய படம் வெளியாகும் நிலையில், நிச்சயம் உலகளாவிய வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.