AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சாய் அபயங்கரின் 6வது இண்டீ பாடலில் இணைந்த நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ்!

Sai Abhyankkars Radhimaa: இளம் இசையமைப்பாளராக தென்னிந்திய மக்களின் மனதில் இடம்பிடித்தவர் சாய் அபயங்கர். இவர் ஆண்டுதோறும் 2 இண்டீ பாடல்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த விதத்தில் 2026ம் ஆண்டில் 2வது வெளியாகும் இண்டீப் பாடல்தான் ரதிமா. இந்த பாடலில் சாய் அபயங்கருடன் இணைந்து நடனமாடும் நடிகை யார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சாய் அபயங்கரின் 6வது இண்டீ பாடலில் இணைந்த நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ்!
ரதிமா பாடல்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 20 Aug 2026 19:52 PM IST

தென்னிந்திய சினிமா வட்டாரங்களில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக இருந்துவருபவர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar). இவரின் இசையமைப்பில் சூர்யா (Suriya) முதல் அல்லு அர்ஜுன் (Allu Arjun) வரை பல்வேறு நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்கள் உருவாகிவருகிறது. இவரின் இசையில் இதுவரை குறைவான திரைப்படங்கள் வெளியாகியிருந்தாலும், இவரின் கைவசத்தில் கிட்டத்தட்ட 8 படங்களுக்கும் மேல் உள்ளது. அதில் பான் இந்திய திரைப்படங்களும் உள்ளது. 2024ம் ஆண்டில் கட்சி சேர என்ற ஆல்பம் பாடலின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானார். அதற்கு பின் ஆச கூட, சித்திர புத்திரி, விழி வீக்குற மற்றும் பவழ மல்லி போன்ற இண்டீ பாடல்கள் வெளியாகியுள்ளது. இந்த பாடல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பையும் பெற்றிருந்தது.

இந்த வரிசையில் சாய் அபயங்கரின் இசையில் 6வது உருவாகியுள்ள இண்டீ பாடல்தான் ரதிமா (Radhimaa). காதல் தோல்வி பாடலாக இது உருவாகியுள்ள நிலையில், மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. அந்த வகையில் இந்த பாடலில் எந்த நடிகை நடனமாடுகிறார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: என் மகன்கள் சினிமாவில் துணிச்சலான முடிவுகளை எடுக்க வேண்டும் – நடிகர் நாகர்ஜுனா

சாய் அபயங்கரின் ரதிமா இண்டீ பாடலில் இணைந்த தெலுங்கு நடிகை:

சாய் அபயங்கரின் இசையமைப்பு மற்றும் குரலில் இந்த ரதிமா பாடலானது உருவாகியுள்ளது. இந்த 6வது இண்டீ பாடலானது வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதியில் வெளியாகிறது. அதை முன்னிட்டு இந்த பாடலில் எந்த நடிகை நடனமாடுகிறார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பாடலில் காந்தா மற்றும் சிவகார்த்திகேயனின் சேயோன் பட நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் இதில் நடனமாடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சியான் விக்ரமுடன் அடுத்த திரைப்படத்தை உறுதி செய்த விஷ்ணு எடவன்!

ரதிமா பாடலில் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் இணைந்தது குறித்து சாய் அபயங்கர் வெளியிட்ட பதிவு:

இந்த ரதிமா பாடலானது காதல் தோல்வி பாடல்கள் உருவாகியுள்ளதாம். இதில் சாய் அபயங்கர் மற்றும் பாக்யஸ்ரீ போர்ஸ் இருவரும் இணைந்து நடனமாடுகிறார். இப்பாடல் வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது படங்களின் இசையமைப்பில் சாய் பிசியாக இருக்கும் நிலையில், ஆண்டுதோறும் 2 இண்டீ பாடல்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இது அவருக்கு மேலும் மேலும் பிரபலத்தை கொடுத்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தி சினிமாவிலும் புது படத்தில் இவர் இசையமைப்பதாக பேச்சுவார்த்தைகளும் நடக்கிறது.

Follow Us