Sai Abhyankkar: 6வது இண்டீ பாடல்.. சூப்பர் அப்டேட் கொடுத்த சாய் அபயங்கர்!
Sai Abhyankkar 6th Indie Song: இளம் இசையமைப்பாளராக ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையும் கட்டுப்படுத்திவைத்திருப்பவர் சாய் அபயங்கர். இவரின் இசையில், ஆண்டுதோறும் 2 இண்டீ பாடலை (ஆல்பம் பாடல்) வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், 2026ம் ஆண்டிற்கான 2வது இண்டீ பாடல் குறித்து அவர் அப்டேட் கொடுத்துள்ளார்.
கடந்த 2024ம் ஆண்டில் வெளியான கட்சி சேர (Katchi Sera) என்ற ஆல்பம் பாடலின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய மக்கள் மத்தியில் பிரபலமான இளம் இசையமைப்பாளர்தான் சாய் அபயங்கர் (Sai Abhyankkar). இவர் பாடகர் திப்புவின் (Thippu) மகனாவார். தனது சிறுவயதிலிருந்தே இசையின்மீது உள்ள ஆர்வத்தின் காரணமாக தனது 19வது வயதிலே தனி பாடல்களை வெளியிட தொடங்கியிருந்தார். கட்சி சேர பாடலின் மூலம் பிரபலமான நிலையில், சித்திரபுத்திரி, விழி வீக்குற, ஆச கூட மற்றும் இறுதியாக பவழ மல்லி போன்ற தனி இண்டீ பாடல்களை இசையமைத்து வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திருந்தார். மேலும் தற்போது சினிமாவில் இசையமைப்பாளராகவும், அறிமுகமாகி இவரின் இசையில் இதுவரை மொத்தம் 3 படங்கள் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் 1 மற்றும் தமிழில் 2 படங்கள் வெளியாகியிருக்கிறது.
தற்போது இசையமைப்பாளராக பிரபலமான இவர், ஆண்டுதோறும் வெளியிடும் இண்டீ பாடல்களையும் வெளியிட்டுவருகிறார். 2026ம் ஆண்டின் தொடக்கத்தில் பவழ மல்லி என்ற 5வது இண்டீ பாடலை வெளியிட்ட நிலையில், 6வது பாடல் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.




இதையும் படிங்க: ஜேசன் சஞ்சயின் சிக்மா படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்… படக்குழு கொடுத்த அப்டேட்
6வது இண்டீ பாடல் குறித்து சாய் அபயங்கர் கொடுத்த அப்டேட்:
இறுதியாக பவழ மல்லி என்ற கல்யாண கொண்டாட்ட பாடல் வெளியான நிலையில், தற்போது உருவாகியுள்ள ஆறாவது இண்டீ பாடல் காதல் தோல்வியை பற்றிய பாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த பாடலுக்கு “ரதிமா” என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டில் குறித்த போஸ்டரை பகிர்ந்து, 6வது இண்டீ பாடல் விரைவில் வெளியாகும் என அப்டேட் கொடுத்துள்ளார்.
தனது 6வது இண்டீ பாடல் குறித்து அப்டேட் பதிவை வெளியிட்ட சாய் அபயங்கர்:
Coming soon #radhimaa #6thindie ♥️ pic.twitter.com/GtvaansPU2
— abhyankkar (@SaiAbhyankkar) August 17, 2026
சாய் அபயங்கர் தற்போது தென்னிந்திய சினிமாவில் பிரபலமான இச்சிவாயமைப்பாளராக இருக்கிறார். இவர் பிரதீப் ரங்கநாதன் மற்றும் சூர்யா போன்ற நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்திருந்த நிலையில், பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகிவிட்டது.
இதையும் படிங்க: நடிகராக எனது தந்தையின் அந்த படங்கள் எனக்கு ஊக்கமளிக்கும் – துருவ் விக்ரம் ஓபன் டாக்
இதையடுத்து இவர் கார்த்தியின் மார்ஷல், சூர்யாவின் 48வது படம், பிரதீப் ரங்கநாதன் தயாரிக்கும் புது படம், தனுஷின் ஓம் மற்றும் தமிழ் முருகன் படம், அல்லு அர்ஜுனின் ராக்கா, விஜய் சேதுபதியின் பத்தா, லோகேஷ் கனகராஜின் பென்ஸ் போன்ற படங்களுக்கு இசையமைத்துவருகிறார். மேலும் பல புது படங்களில் ஒப்பந்தமாகியும் வருகிறார் என்பது குறிப்பிடத்தகக்கது.