ஜேசன் சஞ்சயின் சிக்மா படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்… படக்குழு கொடுத்த அப்டேட்
Sigma Movie Release Update | தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகும் சிக்மா படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அது தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று உச்ச நடிகராக வலம் வந்தவர் நடிகர் தளபதி விஜய். இவர் தீவிர அரசியலில் ஈடுபட்டு தற்போது முதலமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பணியாற்றி வந்த தளபதி விஜய் இனி தமிழக மக்களுக்காக பணியாற்ற உள்ளார். இப்படி இருக்கும் சூழலில் அவரது வாரிசான அவரது மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் தற்போது அடியெடித்து வைத்துள்ளார். நாயகனாக ஜேசன் சஞ்சய் அறிமுகம் ஆவார் என்று தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக இயக்குநராக தனது சினிமா பயணத்தை தொடங்கி உள்ளார். அதன்படி ஜேசன் சஞ்சய் எழுதி இயக்கி உள்ள படத்திற்கு சிக்மா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்து உள்ளார். இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் நிலையில் அவ்வபோது தமிழ் மொழியில் படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




ஜேசன் சஞ்சயின் சிக்மா படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்:
இந்த சிக்மா படத்தை தென்ந்திய மொழிகளில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக வலம் வரும் லைகா புரடெக்ஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரித்து உள்ளார். மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முன்பே முடிவடைந்த நிலையில் படத்தின் வெளியீட்டை முன்னதாக ஜூலை மாதம் முடிவு செய்து இருந்தனர். ஆனால் தளபதி விஜயின் இறுதிப் படமான ஜன நாயகன் ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியானதால் சிக்மா படத்தின் வெளியீட்டை ஒத்தி வைத்தனர். இந்த நிலையில் தற்போது சிக்மா படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர். அதன்படி படம் வருகின்ற 02-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… மிகச் சிறந்த திரைப்படம்… லோகேஷ் கனகராஜின் டிசி படத்தைப் பாராட்டிய மகேஷ் பாபு
சிக்மா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Mark the date for the heist on October 2. 💰 #SIGMA is all set to light up the screens. 🔥 @official_jsj @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @sundeepkishan @MusicThaman @fariaabdullah2 #RajuSundaram #SampathRaj @shivpanditt @follow_anbu @yogjapee @MagaAnan… pic.twitter.com/yD4N14DLeY
— Lyca Productions (@LycaProductions) August 18, 2026
Also Read… அந்த தெலுங்கு நடிகராக நடிக்க ரொம்ப ஆசை – பிரியா பவானி ஷங்கர் பேச்சு!