என் அப்பாகிட்ட யுவன் சாருக்கு போட்டோ அனுப்ப சொல்லுவேன் – ஜேசன் சஞ்சய் சொன்ன விசயம் சுவாரஸ்ய சம்பவம்
Jason Sanjay recent interview is viral on social media | தமிழ் சினிமாவில் தளபதி விஜயின் மகனாக அறிமுகம் ஆகிறார் ஜேசன் சஞ்சய். இவரது இயக்கத்தில் உருவான படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து தற்போது தீவிர அரசியலில் களமிறங்கி உள்ளார் தளபதி விஜய். இவரது நடிப்பில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வந்தது. தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து வந்த தளபதி விஜய் அரசியல் கட்சியை தொடங்கி கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்த போது அவரது மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். நடிகராக அவர் எண்ட்ரி கொடுப்பார் என்று ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக இயக்குநராக அறிமுகம் ஆனார். அவர் இயக்குநராக அறிமுகம் ஆகும் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.
அந்த வகையில் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் சிக்மா. நடிகர் சந்தீப் கிஷன் இந்தப் படத்தில் நாயகனாக நடித்து உள்ள நிலையில் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் சமீபத்தில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் அளித்தப் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
என் அப்பாகிட்ட யுவன் சாருக்கு போட்டோ அனுப்ப சொல்லுவேன்:
அந்தப் பேட்டியில் ஜேசன் சஞ்சயிடம் அவருக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர் யார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த இயக்குநர் ஜேசன் சஞ்சய் தனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா என்று தெரிவித்துள்ளார். யுவன் இசை தனது அனைத்து விதமான உணர்வுகளுக்கு துணையாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் குறிப்பிட்ட பிராண்டில் யுவனின் ஹூடிஸ் விற்கப்பட்டது. அதனை நான் வங்கி உள்ளேன். அந்த புகைப்படங்களை எனது தந்தையிடம் (தளபதி விஜய்) யுவன் சங்கர் ராஜாவிற்கு அனுப்ப சொல்லி கூறுவேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் சிக்மா படத்தில் யுவன் சங்கர் ராஜா ஒரு பாடலைப் பாடியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Also Read… ப்ரீ புரடெக்ஷனில் தீவிரம் காட்டும் மாவீரன் 2 படக்குழு? வைரலாகும் தகவல்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Question: Who is your favorite music director….?#JasonSanjay: #YuvanShankarRaja Sir is my favorite music director.
Question: Please have Yuvan Shankar Raja Sir compose the music for your next film.
Jason Sanjay: In #Sigma, Yuvan Shankar Raja Sir has sung one of the songs. pic.twitter.com/1ZdDGuxxoh
— Movie Tamil (@_MovieTamil) July 31, 2026
Also Read… இது ராமயுகத்தின் உதயம்… அதிகாலையிலேயே வெளியானது ராமாயணா படத்தின் ட்ரெய்லர்



