AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Soori: மாண்டாடி படத்தின் பாடலில் நடனமாடியது இப்படிதான் – சூரி ஓபன் டாக்!

Sooris Mandaadi Dance: தமிழ் சினிமாவில் தற்போது நாயகனாக திரைப்படங்களில் தொடர்ந்து நடித்துவருபவர் சூரி. இவரின் நடிப்பில் மண்டாடி என்ற கடல் சார்ந்த கேங்ஸ்டர்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் சூரி நடனமாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், நடனமாடியதன் காரணம் குறித்து தெரிவித்துள்ளார்.

Soori: மாண்டாடி படத்தின் பாடலில் நடனமாடியது இப்படிதான் – சூரி ஓபன் டாக்!
நடனமாடியது குறித்து சூரி
Barath Murugan
Barath Murugan | Updated On: 28 Jul 2026 21:14 PM IST

நடிகர் சூரி (Soori), சினிமாவில் ஆரம்பகட்டத்தில் அங்கீகரிக்கப்படட்ச் வேடங்களிலும், படங்களில் நகைச்சுவை வேடங்களிலும் நடித்து பிரபலமானார். இவர் முதலமைச்சர் விஜய் (CM Vijay) முதல் அஜித் குமார் (Ajith Kumar) நடித்த படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து பிரபலமாகியிருந்தார். பின் இயக்குநர் வெற்றிமாறனின் (Vetri Maaran) இயக்கத்தில், கடந்த 2023ம் ஆண்டில் வெளியான விடுதலை பார்ட் 1 (Viduthalai Part 1) என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் செய்யப்பட்டார். இதற்கு பின் கருடன் மற்றும் கொட்டுக்காளி போன்ற படங்களிலும் லீட் வேடத்தில் நடித்திருந்தார். இந்த படங்களுக்கு பின் படங்களில் கதாநாயகனாகவே நடித்துவந்தார். இவரின் நடிப்பில் இறுதியாக மாமன் என்ற படம் வெளியாகி திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இதையடுத்து அறிமுக இயக்குநர் மதிமாறன் புகழேந்தி (Mathimaran Pugazhendhi) இயக்கத்தில் நடித்துவந்த புது படம்தான் மண்டாடி (Mandaadi). இப்படத்தில் சூரி ஆக்ஷன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மஹிமா நம்பியார் (Mahima Nambiar) இணைந்து நடித்துள்ளார்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில், சமீபத்தில் மண்டாடி மண்டாடி என்ற பாடல் வெளியானது. இதில் நடிகர் சூரி நடனமாடி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருந்த நிலையில், அதற்கான காரணம் குறித்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மிட்டாய் மழை.. துல்கர் சல்மானின் ‘ஆகாஷம்லோ ஒக தாரா’ பட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

மண்டாடி படத்தில் நடனமாடியது குறித்து பகிர்ந்த சூரி:

சமீபத்தில் நேர்காணலை ஒன்றில் பேசிய சூரி, “மண்டாடி மண்டாடி என்ற பாடல் ஒரு புரோமோ பாடல். இப்பாடல் படத்தில் உள்ளது, ஆனால் நடனமாக இல்லாமல், ஒரு கதையுடன் ஒன்றிய பாடலாக இருக்கும். பாடல் நன்றாக இருக்கிறதே பயன்படுத்துவோம் என்று அதை நடன பாடலாக எடுத்தார்கள். அந்த பாடலில் பட்ஜெட்டும் பெருசு. என்னிடம் இந்த பாடலில் நடனமாடமுடியுமா? என கேட்டார்கள். நானும் பண்ணலாம் ஓகே என சொல்லிவிட்டேன். ஆனால் எனக்கு கொஞ்சம் பயிற்சி மற்றும் ஒத்திகை தேவை. நேரடியாக பாடலில் கொண்டு நடனமாட வைத்துவிடாதீர்கள் என சொன்னேன்.

இதையும் படிங்க: நடிகர் சூரியின் அடுத்தப் படத்தின் கதை இதுதானா? வைரலாகும் தகவல்

அதனால் தினமும் ஷூட்டிங் முடிந்தது எனக்கு 2 மணிநேரம் ட்ரைனிங் இருந்தது நடனமாடுவதற்கு, அது மாதிரி 3 நாட்கள் பயிற்சி செய்தேன். எனக்கும் நல்ல டான்ஸ் வந்துடுச்சி. நான் நடனமாடுவதற்கு மனப்பூர்வமாக தயாராகியிருந்தேன். எது வரவில்லை என்றாலும், வரும் என்று சொன்னால்தான் அது நமக்கு உண்மையிலே வருமா? அல்லது வராதா? என தெரியும்” என அதில் சூரி விளக்கமாக பேசியிருந்தார்.

மண்டாடி படத்தின் முதல் பாடல் குறித்து நடிகர் சூரி வெளியிட்ட எக்ஸ் பதிவு:

சூரியின் மண்டாடி படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. இந்த படமானது வரும் 2026ம் ஆனது செப்டம்பர் 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அந்த வகையில், இப்படத்தின் ப்ரோமோஷன்கள் தற்போதிலிருந்தே தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us