சென்னையில் விறுவிறுப்பாக நடைபெறும் சூர்யா 48 படத்தின் ஷூட்டிங்
Suriya 48 movie is currently taking place in Chennai | தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வகையில் தற்போது சூர்யா 48 படத்தின் அப்டேட்களை தற்போது பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக வலம் வரும் நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் விறுவிறுப்பாக நடைப்பெற்று ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி நடிகர் சூர்யா நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து குறைந்தது 3 படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதன்படி முன்னதாக கருப்பு படம் திரையரங்குகளில் வெளியானது. அதனைத் தொடர்ந்து வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவான சூர்யா 47 படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததை படக்குழு அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.
மேலும் படம் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் இந்தப் படங்களைத் தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்தடுத்தப் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதன்படி நடிகர் சூர்யாவின் 48-வது படத்தை இயக்குநர் டி.ஜே.ஞானவேல் எழுதி இயக்குகிறார். மேலும் இந்தப் படத்திற்கு முன்னதாக இவர்கள் இருவரும் இணைந்து ஜெய் பீம் படத்தில் பணியாற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.




சென்னையில் விறுவிறுப்பாக நடைபெறும் சூர்யா 48 படத்தின் ஷூட்டிங்:
சூர்யா 48 படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது சென்னையில் கடந்த மூன்று நாட்களாகப் நடைபெற்று வருகிறது. மேலும் அந்தப் படப்பிடிப்பில் நடிகர்கள் சூர்யா மற்றும் காயடு லோஹர் இடம்பெறும் முக்கியக் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. படப்பிடிப்பு சீரான வேகத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மேலும் நடிகர் சூர்யா இயக்குநர் டி.ஜே. ஞானவேல் மற்றும் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ் கூட்டணியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… விஸ்வநாத் & சன்ஸ் மாதிரி ஹாய் படம் இருக்குமா? இயக்குநர் விஸ்ணு எடவன் விளக்கம்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
The shooting of the movie #Suriya48 is currently taking place in Chennai, where scenes involving #Suriya and #KayaduLohar are being filmed.
TJGnanavel Film
Production Banner: Hombale Films pic.twitter.com/Qi6Ys379Ke— Movie Tamil (@_MovieTamil) July 28, 2026