AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

H Vinoth: ஜன நாயகன் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் எப்போது வெளியாகும்? – அப்டேட் கொடுத்த எச்.வினோத்!

Jana Nayagan Movie Deleted Scenes: தமிழக முதலமைச்சர் தளபதி விஜய் சினிமாவில் கடைசியாக நடித்திருந்த படம்தான் ஜன நாயகன். இப்படம் 2026ம் ஆண்டு ஜூலை 23ம் தேதியில் வெளியாகி வெற்றிநடைபோட்டுவருகிறது. இந்நிலையில் இப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் எப்போது வெளியாகும் என இயக்குநர் எச்.வினோத் அப்டேட் கொடுத்துள்ளார்.

H Vinoth: ஜன நாயகன் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் எப்போது வெளியாகும்? – அப்டேட் கொடுத்த எச்.வினோத்!
ஜன நாயகன் படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 27 Jul 2026 19:06 PM IST

கோலிவுட் சினிமாவில் மாபெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பை பெற்றுவரும் படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). தமிழக முதலமைச்சர் விஜய்யின் (TN CM Vijay) நடிப்பில் சினிமாவில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம் இது. இந்த படமானது பெண்கள் பாதுகாப்பு மற்றும் ஜன நாயகன் அரசியல் குறித்த அதிரடி கதைக்களத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. இதில் முதலமைச்சர் விஜய் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) நடித்திருந்தார். மேலும் அவரின் மகளாக நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்திருந்தார். கடந்த 2026ம் ஆண்டு ஜூலை 23 தேதியில் வெளியாகியிருந்த இப்படம் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. மேலும் திரையரங்குகளில் சுமார் ரூ 250 கோடிகளுக்கு மேல் வசூலை நெருங்கி வருவதாக கூறப்படுகிறது.

இயக்குநர் எச்.வினோத் இதை இயக்கியிருந்த நிலையில், அவரை பலரும் பாராட்டிவருகிறார்கள். இந்நிலையில், தற்போது இப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் எப்போது வெளியாகும் என்பது குறித்து இயக்குநர் எச்.வினோத் அப்டேட் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: ராமாயணம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளது – நடிகர் யாஷ்

ஜன நாயகன் படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் ரிலீஸ் குறித்து அப்டேட் கொடுத்த எச்.வினோத்:

அண்மையில் தொகுப்பாளர் ஒருவர் எச்.வினோத்திடம், “ஜன நாயகன் படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் ஏதேனும் இருக்கிறதா?” என கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த அவர், “ஆமாம், ஜன நாயகன் படத்தில் மொத்தம் 6 நீக்கப்பட்ட காட்சிகள் உள்ளது. அவற்றில் விஜய் சார் இடம்பெறும் ஒரு வேடிக்கையான காட்சி, 4 சண்டை காட்சி மற்றும் 2 எமோஷனல் காட்சிகள் இருக்கிறது.

இதையும் படிங்க: அது அஜித் குமார் சாரோட கனவு திட்டம் – இயக்குநர் ஏ.எல்.விஜய் ஓபன் டாக்!

அவற்றையெல்லாம் ஒன்றாக வெளியிட தயாரிப்பு நிறுவனத்துடன் நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம். அந்த நீக்கப்பட்ட காட்சிகளை மொத்தமாக தயாரிப்பு நிறுவனத்திடம் ஒப்படைப்போம், அவர்கள் அதை அடுத்தவாரம் (2026 ஆகஸ்ட் முதல் வாரம்) வெளியிடுவார்கள் என நினைக்கிறேன்” என்று அதில் தெரிவித்துள்ளார்.

ஜன நாயகன் பட நீக்கப்பட்ட காட்சிகள் குறித்து எச்.வினோத் பேசியது தொடர்பாக வைரலாகும் பதிவு:

ஜன நாயகன் படமானது இணையத்தில் லீக் ஆகையிருந்தாலும், புதிய திரைப்படத்தை போலவே திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இதில் பல்வேறு தமிழ் நட்சத்திரங்கள் நடித்து அசத்தியுள்ள நிலையில், திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பு இருக்கிறது. விரைவில் கிட்டத்தட்ட ரூ 300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us