AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

AL Vijay: அது அஜித் குமார் சாரோட கனவு திட்டம் – இயக்குநர் ஏ.எல்.விஜய் ஓபன் டாக்!

AL Vijay About Ajiths Gladiators Documentary: இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் இயக்கத்தில் தமிழில் படங்கள் தொடர்ந்து வெளியாகிவருகிறது. இவர் நடிகர் அஜித் குமாரின் கார் ரேஸ் ஆவணப்படத்தையும் எடுத்துள்ளார். இந்நிலையில் அந்த ஆவணப்படத்தின் ரிலீஸ் மற்றும் நடிகர் அஜித் குமாரின் கனவு திட்டம் குறித்து வெளிப்படையாக இயக்குநர் ஏ.எல்.விஜய் பகிர்ந்துள்ளார்.

AL Vijay: அது அஜித் குமார் சாரோட கனவு திட்டம் – இயக்குநர் ஏ.எல்.விஜய் ஓபன் டாக்!
அஜித் மற்றும் ஏ.எல்.விஜய் Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 27 Jul 2026 16:01 PM IST

கோலிவுட் ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக இருந்துவருபவர் அஜித் குமார் (Ajith Kumar). இவர் தமிழ் சினிமாவில் இதுவரை மொத்தமாக 63 படங்களில் நடித்துள்ளார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம்தான் குட் பேட் அக்லி (Good Bad Ugly). கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாகியிருந்த இப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran) இயக்கியிருந்தார். இந்த படமானது வெளியாகி சிறப்பான வெற்றியை பெற்றிருந்த நிலையில், மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் கூட்டணியில் தனது 64வது படத்திலும் அஜித் குமார் இணையவுள்ளார். இந்த தற்போது கார் ரேஸ் போட்டியில் (car Race) பிசியாக இருக்கும் அஜித், அதை ஆவணப்படமாக உருவாகிவருகிறார்.

இதை இயக்குநர் ஏ.எல். விஜய் (AL Vijay) இயக்க, அஜித்தின் புது தயாரிப்பு நிறுவனமானது தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படமானது கார் ரேஸ், அஜித்தின் அணியின் கஷ்டங்கள் போன்றவற்றை காட்டும் ஆவணப்படமாக தயாராகியுள்ளது. அண்மையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் ஏ.எல்.விஜய், அஜித்தின் கார் ரேஸ் ஆவணப்படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட ஆடியோ லான்ச் எப்போது? – வைரலாகும் தகவல்!

அஜித் குமாரின் ஆவணப்படம் குறித்து வெளிப்படையாக பேசிய ஏ.எல்.விஜய்:

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் ஏ.எல். விஜய், “ஆவணப்படத்தில் நாங்கள் பணியாற்றிக்கொண்டிருக்கிறோம், அது இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. விரைவில் அதன் ரிலீஸ் குறித்து அஜித் சார் அறிவிப்பார். இது அஜித் சார்ந்த பார்வை மற்றும் அவரின் கனவு திட்டம். கார் ரேஸ் ரொம்ப ஈஸி கிடையாது. விளையாட்டில் கார் ரேஸ் என்பது மிகவும் பெரிய விஷயம். இந்தியாவின் வரைபடத்தில் மக்கள் மத்தியில் இவ்வாறான ரேஸிங் ஒரு விளையாட்டாக அங்கீகரிக்கப்படவேண்டும் என அஜித் சாரின் ஆசை.

இதையும் படிங்க: இணையத்தில் வைரலாகும் விஜய் சேதுபதி – சாய் பல்லவி பட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

அஜித் சாருடன் பலரும் இணைந்து பணியாற்றிவருகிறார்கள். அவரின் ரேஸிங் ஆவணப்படம் வரும்போது அதற்காக எத்தனை பேர் கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என தெரியும், குறிப்பாக அஜித் சார். இதிலிருக்கும் எல்லாம் ஈஸி கிடையாதது. இதெல்லாம் உண்மையில் நடக்கும் விஷயங்கள். அதில் ரீடேக் எடுக்கமுடியாது. எல்லாமே உண்மை, அந்த நிஜ உலகத்தை சீக்கிரம் பார்ப்பீர்கள்” என அதில் அவர் கூறியிருந்தார்.

அஜித் குமாரின் ரேஸிங் ஆவணப்படம் குறித்து ஏ.எல். விஜய் பேசியது தொடர்பாக வைரலாகும் வீடியோ பதிவு:

அஜித் குமாரின் ஆவணப்படமானது “கிளாடியேட்டர்ஸ்” என்ற டைட்டிலில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படமானது அஜித்தின் முழு கார் ரேஸ் பயிற்சி மற்றும் போட்டிகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட ஆவணப்படமாக. இது சிறப்பாக அஜித்தின் தயாரிப்பில் உருவாகிவரும் நிலையில், விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us