AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

செப்டம்பரில் தொடங்குகிறது AK 64 2படத்தின் ஷூட்டிங்? வைரலாகும் தகவல்

AK 64 Movie Shooting Update Viral On Social Media | தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படத்தின் அப்டேட் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது

செப்டம்பரில் தொடங்குகிறது AK 64 2படத்தின் ஷூட்டிங்? வைரலாகும் தகவல்
அஜித் குமார்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Jul 2026 12:23 PM IST

தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நாயகனாக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் மட்டுமே படங்களுக்காக தங்களது உடல் எடையை அதிகரிப்பதும் குறைப்பதும் என்று ரசிகர்களை தொடர்ந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் அஜித் குமாரும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தனது படங்களுக்காக உடல் எடையில் மாற்றம் காண்பித்து ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்துவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான இரண்டு படங்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படங்கள் வெளியாகி ஒரு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அடுத்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் அஜித் குமார் நடிப்பில் தொடங்கவில்லை. மேலும் அஜித் குமார் நாயகனாக நடிக்கவில்லை என்றாலும் தொடர்ந்து தனது கார் ரேஸிங்கில் கலந்துகொண்டு தொடர்ந்து பல விருதுகளை வென்று வருகிறார். இந்த நிலையில் படத்தில் எப்போது நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

செப்டம்பரில் தொடங்குகிறது AK 64 2படத்தின் ஷூட்டிங்?

இந்த நிலையில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான குட் பேட் அக்லி படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் அவரது நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள 64-வது படத்தை இயக்க உள்ளார். தொடர்ந்து இந்தப் படத்தை யார் தயாரிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் அஜித் குமார் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி ஷாலினி அஜித் குமாரே தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் இந்த அஜித் குமார் 64 படத்தின் படப்பிடிப்பு வருகின்ற செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… ரன்பீர் கபூர் – சாய் பல்லவியின் ராமாயணா 1 பட ட்ரெய்லர் ரிலீஸ் ஒத்திவைப்பு.. காரணம் இதுதான்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Vimal: என்ன தளபதி மாதிரி அழவைக்க முடியாது.. செக் மோசடி வழக்கு குறித்து விமல் அளித்த பதில்!

Follow Us