AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Bobby Deol: என் கூட நடிக்கிறவங்க எல்லாம் அரசியலுக்கு போடுறாங்க – கலகலப்பாக பேசிய பாபி தியோல்!

Bobby Deols Humorous Take on Co-stars in Politics: பாலிவுட் சினிமாவில் உச்ச நடிகராக மற்றும் வில்லனாக மிகவும் பிரபலமானவர் பாபி தியோல். இவர் முதல்வர் விஜய் நடித்திருந்த கடைசி படமான ஜன நாயகனில் மெயின் வில்லனாக நடித்திருந்தார். இந்நிலையில், அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர் தன்னுடன் நடித்த அரசியல் பிரபலங்கள் குறித்து பேசியுள்ளார்.

Bobby Deol: என் கூட நடிக்கிறவங்க எல்லாம் அரசியலுக்கு போடுறாங்க – கலகலப்பாக பேசிய பாபி தியோல்!
முதல்வர் விஜய், பாபி தியோல் மற்றும் பவன் கல்யாண்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 23 Jul 2026 18:22 PM IST

இந்தி சினிமாவில் வில்லனாக மிகவும் பிரபலமானவர் பாபி தியோல் (Bobby Deol). இவர் சினிமாவில் தொடர்ந்து வில்லனாகவே நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் படங்கள் தொடர்ந்து வெளியாகிவருகிறது. இவர் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான திரைப்படம்தான் கங்குவா (Kanguva). கடந்த 2024ம் ஆண்டில் வெளியான கங்குவா திரைப்படத்தில் வில்லனாக நடித்து தமிழில் நுழைந்தார். இவர் ரன்பீர் சிங்கின் (Ranbir Kapoor) அனிமல் (Animal) திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய மக்கள் மத்தியில் இவருக்கு பிரபலம் கிடைத்தது. இவர் தமிழில் 2வது நடித்துள்ள திரைப்படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). முதல்வர் விஜய் (CM Vijay) சினிமாவில் கடைசியாக நடித்துள்ள இப்படத்தில், இவர் மெயின் வில்லனாக நடித்திருந்தார்.

இந்த படமானது 2026ம் ஆண்டு ஜூலை 23ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. அந்த வகையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய பாபி தியோல், தன்னுடைய நடித்த நடிகர்கள் அரசியலில் இருப்பது குறித்து கலகலப்பாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க: சூர்யா பர்த்டே ஸ்பெஷல்… போஸ்டர்களை வெளியிட்டு வாழ்த்தும் படக்குழு

தன்னுடன் நடித்த அரசியல் பிரபலங்கள் குறித்து பாபி தியோல்:

அந்த நேர்காணலில் பேசிய பாபி தியோல், “நான் நிறைய நல்ல மனிதர்களுடன் படங்களில் பணியாற்றியுள்ளேன். சூர்யா மிகவும் நல்ல மனிதர். விஜய் மிகவும் அமைதியான நபர். நான் அவருடன் பெரிதாக எதுவும் பேசியதில்லை. ஆனால், அவர் முதலமைச்சராக பணியாற்றிவருவதில் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் பாலகிருஷ்ணா சாரும் மிகவும் தன்மையான மனிதர், இனிப்பான இதயம் கொண்டவர்.

இதையும் படிங்க: பான் இந்திய மொழிகளில் நாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!

மேலும் பவன் கல்யாணம் மிகவும் அமைதியான நபர். அவரும் அரசியலில் இருக்கிறார். இது எதிர்மறையானதாகவே இருக்கும், என்னுடன் பணியாற்றியவர்கள் எல்லாருமே அரசியலில் இறங்கிவிட்டார்கள். அவர்கள் அரசியலில் இறங்குவதற்கு முன் என்னுடன் படங்களில் நடித்திருக்கிறார்கள். சூர்யா அரசியலில் இல்லை, நான் கொஞ்சம் நகைச்சுவையாக தெரிவித்தேன்” என அதில் அவர் கலகலப்பாக பேசியுள்ளார்.

தன்னுடன் பணியாற்றிய அரசியல் பிரபலங்கள் குறித்து கலகலப்பாக பேசிய பாபி தியோல் குறித்த வீடியோ:

நடிகர் பாபி தியோல் தமிழ் சினிமாவில் இரு படங்களில் மட்டும் நடித்துள்ளார். சூர்யாவின் கங்குவா மற்றும் முதல்வர் விஜய்யின் ஜன நாயகன். இந்த இரு படங்களிலும் அவர்களின் கதாபாத்திரம் மிகவும் நிலை தன்மையாகவே இருந்தது. அந்த வகையில் மேலும் தமிழில் புது படங்கள் நடித்துவருகிறார்.

Follow Us