இன்னைக்குதான் பொங்கல்… ஜன நாயகன் படத்திற்கு வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள் – வைரலாகும் பதிவுகள்
South Indian celebrities wish Thalapathy Vijay | நடிகராக தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் ஜன நாயகன். இந்தப் படத்தின் வெளியீட்டை முன்னிட்டு நடிகர் தளபதி விஜய்க்கு பிரபலங்கள் தொடர்ந்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து தற்போது தமிழ் நாட்டின் முதலமைச்சராக ஆகி உள்ளார் தளபதி விஜய். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக உருவாகி இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் ஜன நாயகன். தளபதி விஜய் நாயகனாக இறுதிப் படமாகவும் முதலமைச்சராக முதல் படமாகவும் இந்த ஜன நாயகன் படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. ஜன நாயகன் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதமே திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் மட்டும் இன்றி பிரபலங்களும் தங்களது வருத்தத்தை தெரிவித்தனர். மேலும் ஜன நாயகன் வெளியாகும் அந்த நாளே தங்களுக்கு பொங்கல் பண்டிகை என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்று ஜன நாயகன் படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்தப் படத்திற்கும் தளபதி விஜய்க்கும் வாழ்த்து தெரிவித்து பிரபலங்கள் பலர் தங்களது எக்ஸ் தள பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த பதிவுகள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.




நடிகர் ரவி மோகன் வெளியிட்ட வாழ்த்து பதிவு:
Happy Pongal 😊
Anna you became the first order of a true ‘Jananayagan’ way before our votes counted, this movie is only the biggest celebration for your authenticity and demeanor as our favorite actor. So our dearest Hon’ble Chief Minister @actorvijay Anna, may this movie soar… pic.twitter.com/WfCLNhg6s5
— Ravi Mohan (@iam_RaviMohan) July 23, 2026
பொங்கல் நல்வாழ்த்துகள் அண்ணா. வாக்குகள் எண்ணப்படுவதற்கு வெகு காலத்திற்கு முன்பே, நீங்கள் உண்மையான ‘ஜனநாயகன்’ ஆகிவிட்டீர்கள்; எங்களுக்குப் பிடித்தமான நடிகராக உங்கள் இயல்பான தன்மைக்கும் கண்ணியத்திற்கும் இந்தத் திரைப்படம் ஒரு மிகப்பெரிய கொண்டாட்டமாக அமையும். எனவே, எங்கள் அன்பிற்குரிய மற்றும் மதிப்பிற்குரிய முதலமைச்சர் விஜய் அண்ணா… இப்படம் மாபெரும் வெற்றி பெற்று, எங்கள் இதயங்களில் என்றென்றும் நிலைத்திருக்கட்டும். வாழ்த்துகளும் விண்ணுலக ஆசிகளும் உங்களுக்கு உரித்தாகட்டும்.
நடிகர் ஸ்ரீராம் வெளியிட்ட வாழ்த்து பதிவு:
Theater pandigai started
Even though it has been released unofficially, most of film lovers did not see it unofficially
It is like Pokiri dialogue
Oru vatti theater la thaan paarpom nu mudivu pannitta
Namma makkal theatrela thaan
Parpaangha
It is proved today Vetri nichayam— actor sriman (@ActorSriman) July 23, 2026
பண்டிகை தியேட்டரில் தொடங்கியது. அதிகாரபூர்வமற்ற முறையில் வெளியானாலும் பெரும்பாலான திரையுலக பிரியர்கள் இதை அதிகாரப்பூர்வமாக பார்க்கவில்லை.
போக்கிரி டயலாக் மாதிரி இருக்கு. ஒரு வாட்டி தியேட்டர்ல தான் பார்ப்போம்னு முடிவு பண்ணிட்டா நம்ம மக்கள் தியேட்டர்ல தான் பார்ப்பாங்க, வெற்றி நிச்சயம் இன்று நிரூபணமாகியுள்ளது.
தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் வெளியிட்ட வாழ்த்து பதிவு:
One Last Time watching #ThalapathyViiay on big screen in #JanaNayagan at Palazzo … going to miss this experience in future 💐
Hon. #CMJosephVijay sir on big screen 🏆 pic.twitter.com/BNkzQEmLl5
— G Dhananjheyan (@Dhananjayang) July 23, 2026
பலாசோவில் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தில் தளபதி விஜய்யை பெரிய திரையில் கடைசியாக ஒருமுறை பார்த்தேன். எதிர்காலத்தில் இந்த அனுபவத்தை இழக்கப் போகிறேன். மாண்புமிகு முதல்வர் ஜோசப் விஜய் சார் பெரிய திரையில்.
இயக்குநர் அனில் ரவிபுடி வெளியிட்ட வாழ்த்து பதிவு:
You’ve given audiences countless memorable moments over the years, @actorvijay sir, and I’m sure #Jananayagan will become another cherished milestone in your remarkable journey. 🤗
From Thalapathy to the Hon’ble Chief Minister of Tamil Nadu, you’ve truly lived up to the name… pic.twitter.com/aJbicrCftN
— Anil Ravipudi (@AnilRavipudi) July 22, 2026
நடிகர் விஜய் சார், பல ஆண்டுகளாக ரசிகர்களுக்கு எண்ணற்ற மறக்க முடியாத தருணங்களை நீங்கள் வழங்கியுள்ளீர்கள்; உங்கள் சிறப்பான பயணத்தில் ‘ஜன நாயகன்’ (Jana Nayagan) என்பது மற்றொரு பொன்னான மைல்கல்லாக அமையும் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது. ‘தளபதி’யிலிருந்து தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சர் வரை, ‘ஜன நாயகன்’ (Jana Nayakudu) என்ற பெயருக்கு நீங்கள் உண்மையாகவே பெருமை சேர்த்துள்ளீர்கள்.
Also Read… தனது கடைசி திரைப்படமான ஜனநாயகன் படத்தை அதிகாரிகளுடன் கண்டுகளித்த முதலமைச்சர் விஜய்..
நடிகர் மேகா ஸ்ரீகாந்த் வெளியிட்ட வாழ்த்து பதிவு:
This is more than a release, this is a moment in history. Wishing my dear brother, Hon’ble Chief Minister of Tamil Nadu, @actorvijay and the entire #JanaNayagan team a grand success.
It’s truly inspiring to see you begin a new chapter of service while giving your fans one final… pic.twitter.com/gmJ0O2XVaB— SRIKANTH MEKA (@actorsrikanth) July 23, 2026
இது வெறும் ஒரு வெளியீடு மட்டுமல்ல, இது வரலாற்றில் ஒரு முக்கிய தருணம். எனது அன்புச் சகோதரரும், தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சருமான நடிகர் விஜய் மற்றும் ஒட்டுமொத்த ஜனநாயகன் குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். ரசிகர்களுக்கு ஒரு இறுதித் திரைப்பட விருந்தை அளித்துக்கொண்டே, அதே வேளையில் மக்கள் சேவையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் உங்களைப் பார்ப்பது மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது. மக்கள் மீதும் சினிமாவின் மீதும் நீங்கள் கொண்டுள்ள அன்பை இது மிகச்சிறப்பாக வெளிப்படுத்துகிறது. இக்குழுவினர் மாபெரும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்!
Also Read… ஊர்வசி – இந்திரன்ஸ் நடிப்பில் இந்த ஜலதாரா பம்ப் செட் படத்தை மிஸ் செய்யாதீர்கள்