தனது கடைசி திரைப்படமான ஜனநாயகன் படத்தை அதிகாரிகளுடன் கண்டுகளித்த முதலமைச்சர் விஜய்..
எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, மம்தா பைஜு, பாபி தியோல் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதலமைச்சர் விஜயின் கடைசிப் படம் என்பதன் காரணமாக, இந்தப் படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 23, 2026: எச். வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜயின் அடுத்த படமான ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தனது கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை சென்னை அடையாறில் அமைந்துள்ள தாகூர் திரைப்பட அரங்கில் கண்டு களித்தார். முதலமைச்சர் விஜயுடன் அரசு தலைமைச் செயலக அதிகாரிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் இந்தச் சிறப்புத் திரையிடலைக் கண்டு களித்தனர்.
பல சிக்கல்களை சந்தித்த ஜனநாயகன் திரைப்படம்:
‘ஜனநாயகன்’ திரைப்படம் முன்னதாக ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை ஒட்டி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ஆனால், படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்படாத சூழலில், திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் கடைசி திரைப்படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்த சூழலில், படம் தள்ளிப்போனது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து, படத்தின் சில காட்சிகள் கசிந்த சம்பவம் திரையுலகினர் மட்டுமல்லாமல், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பல்வேறு வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன.
திரையரங்குகளில் வெளியான ஜனநாயகன் படம்:
பல கட்டங்களாக தொடர்ந்து சிக்கல்களைச் சந்தித்து வந்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, முதலில் ஜூலை 24ஆம் தேதி திரையரங்குகளில் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் சூழலில், ஜூலை 23ஆம் தேதியே வெளியாகும் என கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தனது கடைசி படத்தை அதிகாரிகளுடன் கண்டுகளித்த முதல்வர் விஜய்:
இதனைத் தொடர்ந்து, முன்பதிவு தொடங்கிய நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்தத் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள சூழலில், நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தனது கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ படத்தை சென்னை அடையாறில் அமைந்துள்ள தாகூர் திரைப்பட அரங்கில் கண்டு களித்தார்.
மேலும் படிக்க: ஜன நாயகன் படத்தில் வில்லனாக பாபி தியோலை நடிக்க வைக்க என்ன காரணம்? இயக்குநர் ஓபன் டாக்
எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, மம்தா பைஜு, பாபி தியோல் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதலமைச்சர் விஜயின் கடைசிப் படம் என்பதன் காரணமாக, இந்தப் படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.