H Vinoth: செல்லம்-னு தான் பேசுவாங்க.. பிரகாஷ் ராஜ் மற்றும் விஜய் குறித்து எச்.வினோத்!
H Vinoth About CM Vijay & Prakash Raj Bond: தென்னிந்திய சினிமாவில் பிரபல இயக்குநராக இருந்துவருபவர்தான் எச்.வினோத். இவர் இயக்கத்தில் ஜன நாயகன் படமானது உருவாக்கிய நிலையில், வெளியாக காத்திருக்கிறது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய எச்.வினோத், ஜன நாயகன் பட ஷூட்டிங்கில் விஜய் சார் மற்றும் பிரகாஷ்ராஜின் பாண்டிங் குறித்து பேசியுள்ளார்.
கோலிவுட் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் எச்.வினோத் (H Vinoth). இவரின் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் இவர் தல அஜித் குமார் (Ajith Kumar) முதல் தளபதி விஜய் (CM Vijay) உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார். அந்த வகையில், இவர் இயக்கத்தில் இறுதியாக உருவாகியுள்ள படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). இப்படம்தான் முதலமைச்சர் விஜய்யின் கடைசி திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் முதலமைச்சர் விஜய் நாயகனாக நடிக்க, அவருடன் பூஜா ஹெக்டே (Pooja Hegde), மமிதா பைஜூ (Mamitha Baiju), பாபி தியோல் மற்றும் பல்வேறு நடிகர்களும் இணைந்து பணியாற்றியுள்ளனர். இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு ஜூலை 23ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
அந்த விதத்தில், இப்படத்தின் புரோமோஷன் பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய எச் வினோத், ஜன நாயகன் படத்தின் ஷூட்டிங்கில் முதல்வர் விஜய் மற்றும் நடிகர் பிரகாஷ்ராஜின் பாண்டிங் குறித்து பேசியுள்ளார்.




இதையும் படிங்க: கோர்ட் ரூம் ட்ராமா பிடிக்குமா உங்களுக்கு? அப்போ இந்தி சினிமாவில் வெளியான இந்த இக்கா படத்தை மிஸ் செய்யாதீர்கள்!
பிரகாஷ் ராஜ் மற்றும் முதல்வர் விஜய்யின் பாண்டிங் குறித்து எச் வினோத் பேச்சு:
அந்த பேட்டியில் பேசிய எச்.வினோத், “ஜன நாயகன் திரைப்பட செட்டில் பிரகாஷ் ராஜ் மற்றும் விஜய் சார், செல்லம்-னு தான் கூப்டுபாங்க . விஜய் சார் கிட்ட அந்த தெளிவு இருக்கு. இன்னும் தெளிவாக சொல்லவேண்டும் என்றால், விஜய் சார் குறித்து அன்று இரவுதான், பிரகாஷ் ராஜ் சார் விஜய் சாரை அப்படி விமர்சனம் பண்ணி பேசியிருந்தார். மறுநாள் பிரகாஷ் ராஜ் சார் ஜன நாயகன் பட ஷூட்டிங்கிற்கு வந்தாரு. அப்போது எனக்கே ஆர்வமாக இருந்தது, விஜய் சார் மற்றும் பிரகாஷ்ராஜ் சார் எப்படி பேசுவாங்கனு நான் எதிர்பார்தேன்.
இதையும் படிங்க: துல்கர் சல்மானின் ‘ஐஅம் கேம்’ பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? வெளியான அறிவிப்பு!
மறுநாள் ஷூட்டிங்கில், பிரகாஷ் ராஜ் சாருக்கான காட்சி நடந்துவருகிறது. அப்போது ஷூட்டிங்கிற்குவந்த விஜய் சார், ரொம்ப நல்ல நண்பர்களை போலவே ஓடிவந்து, ரெண்டுபேரும் கட்டிப்பிடித்துக்கொண்டு, ஹாய் செல்லம் என பேசிக்கொண்டனர். அரசியல் வேற, சினிமா வேற. அந்த தெளிவு அவங்க ரெண்டுபேரிரமும் தெளிவாக இருக்கும். நாளை அவர்கள் வெளியே சந்தித்துக்கொண்டாலும் நல்லபடியாக பேசிக்கொள்வார்கள் என அதில் அவர் கூறியுள்ளார்.
பிரகாஷ் ராஜ் மற்றும் முதலமைச்சர் விஜய் பற்றி எச் வினோத் பேசியது தொடர்பான வீடியோ பதிவு:
#HVinoth opens up about the on-set relationship between #PrakashRaj and #Vijay. 🤝🤍
— Gv (@gowtham0725) July 21, 2026
எச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜன நாயகன் படமானது, வரும் 2026ம் ஆண்டு ஜூலை 23ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. அந்த வகையில் இப்படத்தின் டிக்கெட் ப்ரீ புக்கிங் தொடங்கியுள்ளது. இப்படமானது வரும் ரூ 26 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்துள்ளது.