பகவந்த் கேசரி படம் விஜய் சாருக்கு பிடிக்க இதுதான் காரணம் – இயக்குநர் ஹெச். வினோத்
Why Vijay liked the Bhagavanth Kesari movie | தமிழ் சினிமாவில் இந்த வாரம் மிகவும் பிரமாண்டமாக வெளியாக உள்ள ஜன நாயகன் தெலுங்கு சினிமாவில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் ஆகும். இந்தப் படத்தினை விஜய்க்கு பிடிக்க காரணம் என்ன என்பது குறித்து இயக்குநர் பேசியுள்ளார்.
தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குநர் அனில் ரவிபுடி எழுதி இயக்கி திரையரங்குகளில் வெளியான படம் பகவந்த் கேசரி. ஆக்ஷன் ட்ராமா பாணியில் உருவாகி உள்ள இந்த பகவந்த் கேசரி படத்தில் நாயகனாக நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்து இருந்தார். இவருடன் இணைந்து நடிகர்கள் அர்ஜுன் ராம்பால், காஜல் அகர்வால் மற்றும் ஸ்ரீலீலா உட்பட பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தெலுங்கு சினிமாவில் மாபெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து இந்தப் படத்தை தமிழ் சினிமாவில் தற்போது ரீமேக் செய்துள்ளனர்.
அந்தப் படம் தான் தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகி திரையரங்குகளில் வெளியாக உள்ள ஜன நாயகன் படம். இந்தப் படத்தை இயக்குநர் எச். வினோத் இயக்கி உள்ள நிலையில் நடிகர் தளபதி விஜய் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இயக்குநர் எச்.வினோத் அளித்தப் பேட்டி இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்தப் பேட்டியில் நடிகர் விஜய் அவர்களுக்கு பகவந்த் கேசரி படம் பிடிக்க என்ன காரணம் என்று தெரிவித்துள்ளார்.




பகவந்த் கேசரி படம் விஜய் சாருக்கு பிடிக்க இதுதான் காரணம்:
இயக்குநர் எச். வினோத் பேசியதாவது, பகவந்த் கேசரி படம் உங்களுக்கு ஏன் பிடித்திருந்தது என்று தளபதி விஜய்யிடம் கேட்டேன். அதற்கு அவர், அது போக்கிரி பட பாணியிலான கதாநாயகன் கதாபாத்திரம் என்றும், அதனுடன் வலுவான பெண் எம்பவர்மெண்ட் (women empowerment) கருப்பொருள் இணைக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
ஒவ்வொரு காட்சியின் அடிப்படையான கருவும் சிறப்பாக உள்ளது. அதை அணுகிய விதம் பாலய்யா பாணியில் அமைந்துள்ளது. இருப்பினும், மூலப் படத்தில் வில்லனின் நோக்கம் போதுமான அளவு வலுவாக இல்லை என்பதால், நான் அதை மேம்படுத்தியுள்ளேன். பெண் எம்பவர்மெண்ட் விவகாரத்தில் விஜய்க்கு மிகுந்த ஆர்வம் உள்ளது என்றும் எச். வினோத் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… கட்டா குஸ்தி பட இயக்குநருடன் இணையும் நடிகர் கென் கருணாஸ் – வைரலாகும் தகவல்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
I asked #ThalapathyVijay why he liked #BhagavanthKesari. He told me it’s a #Pokkiri-type hero who constantly fights with a strong women empowerment theme tied to it. In every scene, the base is good. The treatment is #Balayya-style. However, the villain’s motive wasn’t strong… pic.twitter.com/JMl27exMvQ
— Movies Singapore (@MoviesSingapore) July 21, 2026
Also Read… தேசிய விருது பெற்றவர்களை கொண்டாடிய ஓம் படக்குழுவினர் – வைரலாகும் போஸ்ட்