H Vinoth: ஜன நாயகனில் அந்த காட்சிகளை விஜய் சார்தான் இயக்கியிருந்தார் – எச். வினோத் தெரிவித்த விஷயம்!
CM Vijay Directed Scene In Jana Nayagan Movie: தமிழ் சினிமாவில் பிராபலமான மற்றும் பிரம்மாண்ட இயக்குநராக இருந்துவருபவர்தான் எச் வினோத். இவரின் இயக்கத்தில் வெளியீட்டிற்கு தயாராகியுள்ள பிராம்மாண்ட படம்தான் ஜன நாயகன். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், இப்படத்தில் முதல்வர் விஜய் இயக்கியிருந்த காட்சிகள் எது என்பது குறித்து பேசியுள்ளார்.
இயக்குநர் எச் வினோத் (H Vinoth) மற்றும் முதலமைச்சர் விஜய்யின் (CM Vijay) கூட்டணியில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த படமானது முதலமைச்சர் விஜய் அரசியலுக்கு முழுவதுமாக நுழைவதற்கு முன், சினிமாவில் கடைசியாக நடித்திருந்த படமாகும். இந்த படத்தில் முதல்வர் விஜய் அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடித்துள்ளார். மேலும் அவருடன் இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde), பாபி தியோல் (Bobby Deol), மமிதா பைஜூ (Mamitha Baiju), நரேன் மற்றும் பிரியாமணி உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது உருவாகி கிட்டத்தட்ட ஒருவருடமாகும் நிலையில், பல்வேறு பிரச்சனைகளை கடந்து வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.
தற்போது இப்படத்தின் புரோமோஷன் பணிகளும் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய எச்.வினோத், ஜன நாயகன் படத்தில் முதல்வர் விஜய் இயக்கியிருந்த காட்சி குறித்து ஓபனாக பேசியுள்ளார். அது பற்றி விவரமாக பார்க்கலாம்.
இதையும் படிங்க: ஜூலை 23-ம் தேதி வெளியாகும் ஜன நாயகன்… தளபதி விஜய் வெளியிட்ட மாஸ் வீடியோ
ஜன நாயகன் படத்தில் முதல்வர் விஜய் இயக்கியிருந்த காட்சிகள் குறித்து இயக்குநர் எச் வினோத் பேச்சு:
அந்த இன்டெர்வியுவில் பேசிய எச் வினோத், அதில் “ஜன நாயகன் படத்தின் டைட்டில் ஆரம்பத்தில் நாளைய தீர்ப்பு என வைப்பதாக இருந்தது. ஆனால் விஜய் சார், மக்களின் நாயகன் மற்றும் இந்த படத்திலும் அவர் ஒரு மாஸ் ஹீரோ. அதனால் முதலிலிருந்தே ஜன நாயகன் என்பதே எனது எண்ணத்தில் இருந்த டைட்டில். இப்படத்தில் நெல்சன், லோகேஷ் கனகராஜ் மற்றும் அட்லீ ஆகிய இயக்குநர்கள் நடித்த காட்சியை விஜய் சார்தான் இயக்கியிருந்தார்.
இதையும் படிங்க: ஃபகத் பாசில் – பிரேம் குமார் படத்தின் கதை இப்படிதான் இருக்குமா? வைரலாகும் தகவல்
முதலில் அந்த காட்சிக்கு நான் எஸ்.ஏ.சந்திரசேகர் சாரும் மற்றும் கிரிக்கெட் வீரர் வருணும் எனது தேர்வுகளாக இருந்தது. இப்படத்தில் இருமுறை விஜய் சார் பார்த்தார். முதலாவது பார்த்த பிறகு சில மாற்றங்களை சொன்னார். பின் இரண்டாவது முறை பார்த்துவிட்டு, “சூப்பர் பா.. கலக்குவோம்” என விஜய் சொன்னதாக அவர் தெரிவித்திருந்தார்.
ஜன நாயகன் ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட நியூ போஸ்டர் குறித்த எக்ஸ் பதிவு:
TVK SUPREMACY in 2 days 💥
Thalapathy Vetri Kondan is on his way 🔥#JanaNayaganFromJuly23#JanaNayakuduFromJuly23#JanNetaFromJuly23
The Hon’ble Chief Minister @actorvijay @TheKVNofficial @KvnProductions #HVinoth @hegdepooja @anirudhofficial @thedeol @_mamithabaiju… pic.twitter.com/mHA5AiRbfI
— KVN Productions (@KvnProductions) July 21, 2026
ஜன நாயகன் படமானது வரும் 2026ம் ஆண்டு ஜூலை 23ம் தேதியில், உலகெங்கும் வெளியாகவுள்ளது. அந்த விதத்தில் கடந்த 2026ம் ஆனது ஜூலை 19ம் தேதி முதல் தமிழகத்தில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது. அந்த வகையில், இதுவரை டிக்கெட் புக்கிங் கலெக்ஷனிலே சுமார் ரூ 26 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளார்.


