AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அரசன் படத்தின் காட்சிகளைப் பார்த்து திருப்தியடைந்த தயாரிப்பாளர்? வைரலாகும் தகவல்

Arasan Movie Update | நடிகர் சிலம்பரசன் நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வரும் படம் அரசன். இந்தப் படத்தின் 1 மணி நேர ரஃப் காட்சிகளை இயக்குநர் வெற்றிமாறன் ஒப்படைத்ததாகவும் அதனை தயாரிப்பாளர் பார்த்துவிட்டு திருப்தி அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

அரசன் படத்தின் காட்சிகளைப் பார்த்து திருப்தியடைந்த தயாரிப்பாளர்? வைரலாகும் தகவல்
அரசன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 20 Jul 2026 14:34 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் வெற்றிமாறன். நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் வெற்றிமாறன். இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர் வெற்றிமாறன் அதிக அளவில் நடிகர் தனுஷை வைத்தே படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அனைவரும் இயக்குநர் வெற்றிமாறனின் ஆதர்சன நாயகன் தனுஷ் என்றும் தனுஷின் ஆதர்சன இயக்குநர் வெற்றிமாறன் என்று கூறுவது வழக்கம். இப்படி தனுஷின் ஆதர்சன இயக்குநராக வலம் வரும் வெற்றிமாறன் தற்போது தனுஷின் போட்டி என்று சினிமாவில் கூறப்படும் நடிகர் சிலம்பரசனை வைத்து அரசன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படம் தொடர்பான அப்டேட்டை தற்போது பார்க்கலாம்.

அரசன் படத்தின் காட்சிகளைப் பார்த்து திருப்தியடைந்த தயாரிப்பாளர்?

அரசன் படத்தின் படப்பிடிப்பு சுமார் 40 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இயக்குனர் வெற்றிமாறன், கிட்டத்தட்ட 1 மணி நேரக் காட்சிகளைக் கொண்ட ஒரு ரஃப் பதிப்பைத் தயாரித்துள்ளார். எஸ்.டி.ஆர் மற்றும் தயாரிப்பாளர் காளிபுலி எஸ். தாணு ஆகியோர் அந்தக் காட்சிகளைப் பார்த்து திருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ராஜன் வகைரா படத்தின் படப்பிடிப்பு ஜூலை 21-ஆம் தேதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதால், பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அரசன் படத்தின் படப்பிடிப்பு ஜூலை 25-ஆம் தேதிக்குப் பிறகு மீண்டும் தொடங்கும் என்றும், முக்கிய சண்டைக் காட்சிகள் படமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சிலம்பரசன் டி.ஆர் தற்போது துபாயில், தனது கதாபாத்திரத்திற்காக உடல் எடையைக் குறைத்து, அடுத்த கட்ட படப்பிடிப்பிற்குத் தயாராகி வருகிறார். இது ஒரு மாஸ் வட சென்னை கேங்ஸ்டர் ஸ்பின்-ஆஃப் திரைப்படம் என்றும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது.

Also Read… ஒரே படத்தில் ஓஹோ.. அடுத்த படம் புஷ்.. இந்த கியூட் சிறுமி எந்த நடிகை தெரியுமா?

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Dhanush: இயக்குநராக எனது முதல் தேசிய விருது.. இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி – தனுஷ்!

Follow Us