AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Vetrimaaran: அரசனும், அன்பும் சந்திப்பார்களா? வெற்றிமாறன் கொடுத்த சுவாரஸ்ய பதில்!

Vetrimaarans Clarification: கோலிவுட் சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். இவரின் இயக்கத்தில் தற்போது சிலம்பரசனின் அரசன் படத்தின் ஷூட்டிங் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. அந்த வகையில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட வெற்றிமாறனிடம், அரசன் படத்தில் தனுஷ் மற்றும் சிம்புவின் சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

Vetrimaaran: அரசனும், அன்பும் சந்திப்பார்களா? வெற்றிமாறன் கொடுத்த சுவாரஸ்ய பதில்!
தனுஷ் மற்றும் சிலம்பரசன்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 30 Apr 2026 19:55 PM IST

இயக்குநர் வெற்றிமாறன் (Vetrimaaran) இயக்கத்தில் தமிழில் புதிதாக உருவாகிவரும் திரைப்படம்தான் அரசன் (Arasan). இந்த படத்தில் நடிகர் சிலம்பரசன் (Silambarasan) லீட் நாயகனாக நடிக்க, இப்படமானது வட சென்னை (Vada Chennai) படத்தின் டைம் லைனில் நடக்கும் மற்றொரு கதையை அடிப்படியாக கொண்டு இயக்கப்பட்டுவருகிறது. இதில் வட சென்னை படத்தில் நடித்த சமுத்திரக்கனி (Samuthirakani), ஆண்ட்ரியா (Andrea), அமீர் (Ameer) உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துவருகிறார்கள். இந்த அரசன் படத்தை வீ க்ரியேஷன் என்ற நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரித்துவருகிறார். மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander) இசையமைத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்போது அரசன் படத்தின் இரண்டாவதுக்கட்ட ஷூட்டிங் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. மேலும் சமீபத்தில் வெற்றிமாறன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்தனர். அதில் அரசன் படத்தில், அரசனும் (சிம்பு), அன்பும் (தனுஷ்) (Dhanush) சந்திப்பார்களா? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு வெற்றிமாறன் சிறப்பான பதிலை கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: 23 ஆண்டுகளாகத் தொடர்ந்து உச்சத்தில் நீடிப்பது ஒரு நம்பமுடியாத சாதனை – த்ரிஷா குறித்து புகழ்ந்து பேசிய ஆர்.ஜே.பாலாஜி

அரசன் படம் குறித்து வெற்றிமாறன் சொன்ன சுவாரஸ்ய விஷயம்:

அந்த நிகழ்ச்சியின்போது பேசிய வெற்றிமாறன், “அது எனக்கு தெரியவில்லை. உண்மையிலே எனக்கு தெரியாது. நான் தற்போது படத்தின் சுட எடுக்கிறேன், பின் எழுதுகிறேன்,எடுக்கிறேன் எழுதுகிறேன் என்பதுபோலவே அரசன் படப்பிடிப்பு நடந்துவருகிறது. ஒருவேளை திடீரென எவ்வாறு சந்திப்பு போல காட்சி வந்தால்?, எல்லாமே சரியாக நடந்தால் அது நடக்கும் எனது எழுத்தில் அது வரவில்லை என்றால், படத்திலும் வராதுதான். அரசன் திரைப்படத்தில், அன்பு (தனுஷ்), அரசனின் (சிலம்பரசன்) சந்திப்பு குறித்து நான் எதுவும் திட்டமிடவில்லை, எனக்கு ஐடியா எதுவும் இல்லை” என அதில் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: கமல் ஹாசனின் சூப்பர் ஹிட் படம் மூன்றாம் பிறை மறுசீரமைக்கப்பட்டு ஓடிடியில் வெளியாக உள்ளது

அரசன் திரைப்படம் குறித்து சிலம்பரசன் வெளியிட்ட பதிவு:

சிலம்பரசனின் அரசன் படத்தில், அவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இதுகுறித்த இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. மேலும் அரசன் பட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. அந்த வகையில் 2026ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு இப்படம் வெளியாக தயாராகிவருவதாக கூறப்படுகிறது. மேலும் தனுஷின் வட சென்னை படத்தின் பின்னணி கதையில் இப்படம் தயாராகிவரும் நிலையில், சிலம்பரசனுக்கு பல ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் வெற்றிப்படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us