AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கர படத்திற்கு தனுஷ் கொடுத்த ஹைப் ஒர்க் ஆனதா? மக்கள் கொடுத்த விமர்சனம் இதோ

Kara Movie X Review Here: தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் கர. இந்தப் படம் பான் இந்திய மொழிகளில் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில் படத்தினை பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை தெரிவித்து உள்ளனர்.

கர படத்திற்கு தனுஷ் கொடுத்த ஹைப் ஒர்க் ஆனதா? மக்கள் கொடுத்த விமர்சனம் இதோ
கரImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 30 Apr 2026 11:48 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவாது நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான முதல் படம் கர. இந்த கர படத்தை இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதி இயக்கி உள்ளார். படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்து உள்ள நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்த கர படத்தின் ட்ரெய்லரைப் பார்க்கும் போது வேலை செய்துக்கொண்டு தனது குடும்பத்துடன் அமைதியாக வாழ்ந்து வரும் தனுஷிற்கு ஒரு பெரிய பணச் சிக்கல் ஏற்படுகிறது. அதனால் அவர் பணத்தை கொள்ளையடிப்பதாகவும் அவர் முன்பு அந்த மாதிரியான வேலைகளையே செய்து வந்தார் என்பது போலவும் காட்டப்படுகின்றது.

இந்த மாதிரியான செயல்களால் தனுஷ் மற்றும் அவரது குடும்பத்தை எந்த சூழலுக்கு தள்ளிகிறது என்பதே படத்தின் கதை. இந்தப் படம் இன்று 30-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் தற்போது தங்களது கருத்துகளை எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ளனர். அது தற்போது வைரலாகி வருகின்றது.

கர படத்தின் எக்ஸ் விமர்சனம் இதோ:

கர முதல் பாதி அருமையான முதல் பாதி. உணர்வுப்பூர்வமான, மெதுவாகப் பதற்றத்தை உருவாக்கும் ஒரு கொள்ளைத் திரில்லர். தனுஷ் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கே.எஸ். ரவிக்குமார் மிகச் சிறந்த நடிப்பு. ஜி.வி. பிரகாஷின் அட்டகாசமான இசை. படம் ஒரு அதிரடியான தொடக்கத்துடன் ஆரம்பிக்கிறது. முதல் பாதி ஒரு விறுவிறுப்பான காட்சியுடன் முடிகிறது. கதை மற்றும் மாஸ் இரண்டும் உண்டு.

கர படத்தின் எக்ஸ் விமர்சனம் இதோ:

கரவின் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வளர்ச்சியும் அற்புதமாக உள்ளது. தனுஷின் பதட்டமான மற்றும் குற்றவுணர்ச்சி நிறைந்த நடிப்பு. கே.எஸ். ரவிக்குமாரின் உணர்வுப்பூர்வமான பாத்திரம். கருணாசின் இயல்பான நகைச்சுவை. மாமிதா பைஜுவின் திரை இருப்பு குறைவாக இருந்தாலும், அவரது தாக்கம் சிறப்பாக உள்ளது.

கர படத்தின் எக்ஸ் விமர்சனம் இதோ:

கர படத்தின் முதல் பாகம் சிறப்பாக உள்ளது. மிகவும் மெதுவாகவும் மிகவும் அழுத்தமான உணர்வுகளை பிணைத்துள்ளது. தனுஷின் நடிப்பி சிறப்பாக உள்ளது. மேலும் தனுஷ் மற்றும் கருணாஸ் காம்போ சிறப்பாக உள்ளது. மேலும் படத்திற்கு ஜிவி பிரகாஷின் இசை படத்திற்கு வழு சேர்த்துள்ளது.

Also Read… பவிஷ் நாராயணன் நடிப்பில் முடிவடைந்தது லவ் ஓ லவ் படத்தின் ஷூட்டிங்

கர படத்தின் எக்ஸ் விமர்சனம் இதோ:

கர விக்னேஷ் ராஜா கதாபாத்திரங்களையும் கதையையும் கட்டமைக்கப் போதுமான நேரத்தை எடுத்துக்கொண்டார். இது மிகவும் அவசியமான ஒன்றாகும். மிகச் சிறப்பான எழுத்து. காட்சி அமைப்புகள் நேர்த்தியாக உள்ளன. மேலும் இது படத்தின் இரண்டாம் பாதியை மிகச் சிறப்பாக அமைத்துத் தருகிறது.

Also Read… ரகசிய கேமரா… பாலியல் சீண்டல்.. பிரபல இசையமைப்பாளர் மீது புகார்களை அடுக்கிய பாடகி ஸ்வாகதா!

கர படத்தின் எக்ஸ் விமர்சனம் இதோ:

கர படத்தின் இடைவேளை காட்சி மிகவும் சிறப்பாக உள்ளது. ஆரம்ப 15 நிமிடங்களுக்கான அமைப்பும், பதற்றம் நிறைந்த இடைவேளைக் காட்சியும் அமர்க்களமாக இருந்தன. தனுஷின் நடிப்பு  அவர் உண்மையிலேயே ஒரு ‘அசுரன்’தான். விக்னேஷ் ராஜாவிடமிருந்து ஒரு நேர்மையான திரைப்பட உருவாக்கம் அமைந்துள்ளது.

Follow Us