கர படத்திலிருந்து வெளியானது ஐயா ஐயா லிரிக்கள் வீடியோ
Ayya Ayya Lyrical Video From Kara Movie: நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கர. இந்தப் படத்தில் இருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகி உள்ள நிலையில் தற்போது மூன்றாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக இருப்பவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் மட்டும் அடுத்தடுத்து படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. அந்த வகையில் இந்த 2026-ம் ஆண்டு முதலாவதாக நடிகர் தனுஷ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கர. இந்தப் படத்தை இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் தனுஷின் தந்தையாக நடிகரும் இயக்குநருமான கே.எஸ்.ரவிக்குமார் நடித்து உள்ளார். இவர் இரண்டாவது முறையாக தனுஷின் தந்தையாக இந்தப் படத்தில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்து உள்ளார். இது முன்னதாக நடிகை மமிதா பைஜூ நடிப்பில் வெளியாக கதாப்பாத்திரமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் வருகின்ற 30-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளடுள்ளது. மேலும் படக்குழுவினர் படம் குறித்து பேசிவது தொடர்ந்து வைரலாகி வருகின்றது.
கர படத்திலிருந்து வெளியானது ஐயா ஐயா லிரிக்கள் வீடியோ:
இந்த நிலையில் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் படத்தில் இருந்து முன்னதாக இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது 3-வது பாடலின் லிரிக்கள் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளார். ஐயா ஐயா என்று தொடங்கும் இந்தப் பாடல் அப்பா மற்றும் மகன் பாசத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளது. இந்தப் பாடலை பாடலாசிரியர் யுக பாரதி எழுதி உள்ள நிலையில் ஜிவி பிரகாஷ் குமாரே பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… மக்களே ரெடியா?… முடிவடைந்தது டிசி படத்தின் ஷூட்டிங் – கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு
கர படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#AyyaAyya lyric video out now 🤍
A @gvprakash vocal & musical 🎶
A #YugaBharathi lyrics ✍🏻#KaraFromApril30Directed by @vigneshraja89
Produced by @IshariKGanesh@dhanushkraja @VelsFilmIntl @velsmusicintl @kushmithaganesh @ThinkStudiosInd… pic.twitter.com/zx6rAT8m95— Vels Film International (@VelsFilmIntl) April 28, 2026
Also Read… கர படத்தின் முன்பதிவை தொடங்கியது படக்குழு – வைரலாகும் பதிவு



