AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அரசன் படத்தின் தற்போதைய நிலை என்ன? வைரலாகும் போட்டோ

Silambarasans Arasan Movie Shooting Spot Photo: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிலம்பரசன் தற்போது அரசன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

அரசன் படத்தின் தற்போதைய நிலை என்ன? வைரலாகும் போட்டோ
அரசன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Apr 2026 12:36 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். கைக் குழந்தையாக இருக்கும் போதே சினிமாவில் என்ட்ரி கொடுத்த இவர் குழந்தை நட்டத்திரமாக இருக்கும் போதே தனக்கு என்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். குழந்தை நட்சத்திரமாக நடிகர் சிலம்பரசனை ஏற்றுக்கொண்ட ரசிகர்கள் அவர் வளர்ந்து நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகும் ஏற்றுக் கொண்டனர். அந்த வகையில் நடிகர் சிலம்பரசன் நாயகனாக நடிக்கும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. நடிகர் சிலம்பரசன் சொந்த வாழ்க்கையில் பல விமர்சனங்களை சந்தித்தாலும் அவரது ரசிகர்கள் மட்டும் அவர் மீது வைத்து இருந்த நம்பிக்கையை எப்போதுமே கைவிட்டது இல்லை. இது சிலம்பரசனுக்கு ஒரு பெரிய பலமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் நடிகர் சிலம்பரசன் நடிப்பு வாழ்க்கையில் சரிவில் இருந்த போது அவரது ரசிகர்கள் அவர் மீது வைத்து இருந்த நம்பிக்கைதான் அவரை மாஸாக ஒரு கம்பேக் கொடுக்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த கம்பேக்கிற்கு பிறகு நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.

அரசன் படத்தின் தற்போதைய நிலை என்ன?

அந்த வகையில் நடிகர் சிலம்பரசன் தற்போது நடித்து வரும் படம் அரசன். இயக்குநர் வெற்றிமாறன் இந்தப் படத்தினை எழுதி இயக்கி வருகிறார். படத்தின் டைட்டில் டீசர் வெளியான போது அதனைப் பார்த்த ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வந்த நிலையில் இடையில் சில பிரச்சனைகளால் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பிரச்சனைகள் எல்லாம் சரி செய்த பிறகு தற்போது மீண்டும் படப்பிடிப்பு வேகமாக தொடங்கியுள்ளனர் அரசன் படக்குழுவினர். இது தொடர்பான புகைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே உண்டான காதல் அதிசயம் – 28 ஆண்டுகளைக் கடந்தது ஜீன்ஸ் படம்!

அரசன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… மதுரை மக்களே ரெடியா இருக்கீங்களா? – வைரலாகும் ஆர்.ஜே.பாலாஜி எக்ஸ் பதிவு

Follow Us