AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே உண்டான காதல் அதிசயம் – 28 ஆண்டுகளைக் கடந்தது ஜீன்ஸ் படம்!

28 Years Of Jeans Movie: தமிழ் சினிமாவில் நடிகர்கள் பிரசாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் ஜீன்ஸ். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது 28 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே உண்டான காதல் அதிசயம் – 28 ஆண்டுகளைக் கடந்தது ஜீன்ஸ் படம்!
ஜீன்ஸ் படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Apr 2026 13:21 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 1998-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ஜீன்ஸ். ரொமாண்டிக் காமெடி பாணியில் வெளியான இந்தப் படத்தை இயக்குநர் சங்கர் எழுதி இயக்கி இருந்தார். பிரமாண்ட இயக்குநர் என்று அவரை அனைவரும் அழைப்பதற்கு ஏற்ப இந்தப் படம் மிகவும் பிரமாண்டமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடித்து இருந்தார். மேலும் இவர் இரட்டை வேடத்தில் இந்தப் படத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. நடிகர் பிரசாந்திற்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் லட்சுமி, ராதிகா, நாசர், செந்தில், எஸ்.வி.சேகர், ராஜு சுந்தரம், கீதா, காந்திமதி, ஜானகி சபேஷ், எஸ்.என்.லட்சுமி, ராம் ராமச்சந்திரன் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

மேலும் இந்த ஜீன்ஸ் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

28 ஆண்டுகளைக் கடந்தது ஜீன்ஸ் படம்:

இந்தப் படத்தில் அமெரிக்காவில் பெரிய பிசினஸ் மேனாக இருக்கும் நாசரின் இரட்டை மகன்களாக நடிகர் பிரசாந்த் நடித்து இருந்தார். நாசரும் இரட்டைப் பிறவியாக இந்தப் படத்தில் நடித்து இருப்பார். இரட்டை பிறவிகளாக பிறந்த நாசருக்கு வெவ்வேறு குடும்பத்தில் பெண் எடுத்து கட்டியதால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்றட்ட காரணத்தால் தனது இரட்டை மகன்களுக்கு இரட்டையர்களாக பிறந்த பெண்களை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவர் நினைக்கின்றார்.

Also Read… 2026 தமிழக தேர்தல்.. வாக்குகளை செலுத்திய சின்னத்திரை பிரபலங்கள் யார்? லிஸ்ட் இதோ!

ஆனால்பாட்டியின் வைத்தியத்திற்கக அமெரிக்கா சென்ற ஐஸ்வர்யா ராய் மற்றும் பிரசாந்திற்கு காதல் ஏற்படுகிறது. நாசரின் இந்த முடிவை தெரிந்துகொண்ட ஐஸ்வர்யவின் பாட்டி ஐஸ்வர்யாவும் இரட்டைப் பிறவி என்று பொய் சொல்கிறார். இதனைத் தொடர்ந்து என்ன நடந்தது என்பதே படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 28 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

Also Read… நல்ல எதிர்காலத்திற்காக என் உரிமையும் கடமையும் நிறைவேற்றினேன் – நடிகர் சூரி

Follow Us