அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமானது விவோ எஸ்2 ஸ்மார்ட்போன்.. முக்கிய அம்சங்கள் என்ன என்ன?
Vivo S2 Smartphone Launched In India | விவோ நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், விவோ எஸ்2 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்திய ஸ்மார்ட்போன் (Smartphone) சந்தையிலும், இந்திய பொதுமக்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமாக உள்ள ஸ்மார்ட்போன் நிறுவனம் தான் விவோ (Vivo). இந்த நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், விவோ எஸ்2 ஸ்மார்ட்போனை (Vivo S2 Smartphone) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
விவோ எஸ்2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்
விவோ நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் தனது விவோ எஸ்2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 2019 ஆம் ஆண்டு விவோ நிறுவனம், விவோ எஸ்1 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த நிலையில், அதனை தொடர்ந்து இந்த விவோ எஸ்2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.




இதையும் படிங்க : விரைவில் தொடங்கும் பிளிப்கார்ட் ஃப்ரீடம் சேல்.. ஐபோன் 17 ப்ரோவுக்கு அசத்தல் தள்ளுபடி!
விவோ எஸ்2 ஸ்மார்ட்போன் – சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
Vivo Set to launch its most awaited Vivo S2 5G phone today
– The phone is launching as Redmi also gears up to launch its Redmi Note 17 5G smartphone series today.
– The Vivo S2 is launching after a seven-year gap since the S1 launch in 2019.
– Vivo S2 is expected to feature a… pic.twitter.com/ZGceGPPmeN— TelecomTalk (@TelecomTalk) August 6, 2026
இந்த ஸ்மார்ட்போன் 6.83 இன்ச் 3டி கர்வுடு AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 7360 டர்போ பிராசசர் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 7050 mAh பேட்டரி அம்சத்தை கொண்டுள்ளது.
விலை மற்றும் இதர சிறப்பு அம்சங்கள்
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ரூ.39,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுவே 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.49,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.