விரைவில் தொடங்கும் பிளிப்கார்ட் ஃப்ரீடம் சேல்.. ஐபோன் 17 ப்ரோவுக்கு அசத்தல் தள்ளுபடி!
Flipkart Freedom Sale 2026 | ஆகஸ்ட் 08, 2026 அன்று பிளிப்கார்டின் 2026 ஆம் ஆண்டுக்கான ப்ரீடம் சேல் தொடங்க உள்ளது. பிளஸ் பயனர்களுக்கு ஒரு நாளுக்கு முன்னதாகவே சேல் சலுகைகள் கிடைக்கும். இந்த நிலையில், இந்த சேலில் ஐபோன் 17 ப்ரோவுக்கு கிடைக்ககூடிய சலுகை குறித்து பார்க்கலாம்.
உலகின் மிகப்பெரிய இ காமர்ஸ் (e Commerce) நிறுவனங்களில் ஒன்றான பிளிப்கார்ட் (Flipkart), ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று ஃப்ரீடம் சேலை (Freedom Sale) அறிவிக்கும். 2026 ஆம் ஆண்டுக்கான சுதந்திர தினம் இன்னும் ஒருசில நாட்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில், பிளிப்கார்ட் தனது 2026 ஃப்ரீடம் சேலுக்கு (Flipkart 2026 Freedom Sale) தயாராகி வருகிறது. இந்த சேலில் ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட மின்சாதன பொருட்களுக்கு அட்டகாசமான தள்ளுபடிகள் வழங்கப்பட உள்ளன. இந்த நிலையில், பிளிப்கார்ட் ஃப்ரீடம் சேலில் ஐபோன் 17 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு (iPhone 17 Pro Smartphone) எவ்வளவு தள்ளுபடி வழங்கப்பட உள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஐபோன் 17 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ரூ.17,000 வரை தள்ளுபடி
பிளிப்கார்ட் நிறுவனத்தின் இந்த ப்ரீடம் சேல் ஆகஸ்ட் 08, 2026 அன்று தொடங்க உள்ளது. பிளிப்கார்ட் பிளஸ் மற்றும் பிளிப்கார்ட் பிளாக் பயனர்கள் ஒரு நாளுக்கு முன்னதாக அதாவது ஆகஸ்ட் 07, 2026 அன்றே சேல் பயன்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த சேலில் மிகவும் அசத்தலான அம்சத்தை ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோ பெறுகிறது. அதாவது, இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.17,000 வரையிலான சலுகை வழங்கப்பட உள்ளதாக பிளிப்கார்ட் அறிவித்துள்ளது.