மனைவிக்கு ஐபோன் 18 ப்ரோ வாங்க தங்க நகையை விற்பனை செய்த கணவன்!
Delhi Man Sold Gold To Buy iPhone | செப்டம்பர் 18, 2026 அன்று ஐபோனை வாங்க இந்தியாவில் வாடிக்கையாளர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். இந்த நிலையில், டெல்லியை சேர்ந்த ஒருவர் தனது மனைவிக்கு ஐபோன் வாங்க தங்க நகையை விற்பனை செய்துள்ளார்.
ஆப்பிள் (Apple) நிறுவனம் சமீபத்தில் தனது ஆப்பிள் ஐபோன் 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை (Apple iPhone 18 Series Smartphones) உலக அளவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 18, 2026 முதல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் புதிய மாடல் ஐபோன்கள் அறிமுகமாகும்போது, அந்த ஸ்மார்ட்போனை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்ற ஆர்வம் பொதுமக்கள் மத்தியில் மிகுதியாக இருக்கும். இந்த ஆண்டு, ஐபோன்களின் விலை கடும் உயர்வை சந்தித்து இருந்த போதிலும், அந்த ஆர்வம் மக்கள் மத்தியில் குறையாமலே இருந்தது. அந்த வகையில், தங்க நகையை அடகு வைத்து ஒருவர் தனது மனைவிக்காக ஐபோன் வாங்கிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
நகையை விற்பனை செய்து மனைவிக்கு ஐபோன் வாங்கிய கணவர்
ஐபோன் 18 விற்பனைக்கு வந்தபோது இந்தியாவில் உள்ள ஐபோன் ஸ்டோர்களின் வாசல்களில் ஐபோன்களை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர் பகிர்ந்த கதை குறித்து இந்தியா டுடே பதிவிட்டுள்ளது. அதில், வரிசையில் நின்றுக்கொண்டு இருந்த ஒருவரிடம் கேட்டபோது நான் என் மனைவிக்காக ஐபோன் 18 ப்ரோ ஸ்மார்ட்போன் வாங்க வந்துள்ளேன். அதற்காக தங்க நகையை விற்பனை செய்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க : வாட்ஸ்அப் ஸ்கேம்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க உதவும் அம்சங்கள்.. என்ன என்ன?




ஐபோன் 18 ப்ரோ வாங்க காரணம் என்ன?
அவர் தனது மனைவிக்கு ஐபோன் 18 ப்ரோ வாங்குவதில் உறுதியாக இருந்த நிலையில், அது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது மனைவி என்னிடம் ஐபோன் கேட்டார். ஆனால், அப்போது என்னால் வாங்கி கொடுக்க முடியவில்லை. அதன் காரணமாக இப்போது சிறந்த அம்சங்களை கொண்ட ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ ஸ்மார்ட்போனை வாங்க வந்துள்ளேன். என்ன ஆனாலும், இந்த ஐபோனை வாங்காமல் செல்ல மாட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : வேலை, பயணம் மற்றும் தினசரி பயன்பாட்டிற்கு சிறந்த ANC இயர்பட்ஸ் மற்றும் ஹெட்போன்கள்
ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ இந்தியாவில் சுமார் ரூ.3 லட்சத்திற்கு விற்பனையாகிறது. அதாவது, ரூ.3 லட்சத்திற்கு வெறும் ரூ.100 மட்டுமே குறைவாக உள்ளது. இந்த நிலையில், அந்த நபர் தனது மனைவிக்காக தங்கத்தை விற்பனை செய்து ஸ்மார்ட்போன் வாங்கியுள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது.