AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

விரைவில் விற்பனைக்கு வரும் ஐபோன் 18 ப்ரோ சீரீஸ்.. சிறப்பு தள்ளுபடிகளும் உண்டு.. முழு விவரம் இதோ!

Apple 18 Pro Series Sell Goes Live From September 18 2026 | ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் தனது ஆப்பிள் 18 ப்ரோ சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இந்த நிலையில், அந்த ஸ்மார்ட்போன்கள் செப்டமர் 18, 2026 முதல் விற்பனைக்கு வர உள்ளது.

விரைவில் விற்பனைக்கு வரும் ஐபோன் 18 ப்ரோ சீரீஸ்.. சிறப்பு தள்ளுபடிகளும் உண்டு.. முழு விவரம் இதோ!
ஆப்பிள் 18 ப்ரோ சீரீஸ் ஸ்மார்ட்போன்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 16 Sep 2026 21:18 PM IST

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் தனது ஆப்பிள் 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை (Apple 18 Series Smartphones) அறிமுகம் செய்தது. அதனுடன் இணைந்து 12 வாட்ச் சீரீஸ், ஏர்பாட் 5 ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 18, 2026 முதல் விற்பனைக்கு வர உள்ளது. ஐபோன் டுயோ ஸ்மார்ட்போன் (iPhone Duo Smartphone) செப்டம்பர் 23, 2026 முதல் அமலுக்கு வர உள்ளது. இவற்றில் ஐபோன் 18 ப்ரோ (iPhone 18 Pro) மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் (iPhone 18 Pro Max) ஸ்மார்ட்போன்கள் ஆகியவற்றுக்கு சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்பட உள்ளது. ஆப்பிளின் இணையதளம் மூலம் இந்த சலுகைகளை பெற்றுக்கொள்ளலாம்.

ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் சலுகைகள்

256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.1,64,900-க்கு அறிமுகமாகியுள்ள நிலையில், 2 டிபி ஸ்டோரேஜ் கொண்ட ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.3,14,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல, 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ.1,79,900-க்கு அறிமுகமாகியுள்ள நிலையில், 2 டிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.3,29,900-க்கு அறிமுகமாகியுள்ளது.

இதையும் படிங்க : ஒரு போட்டோதானேன்னு அலட்சியமா இருக்காதீங்க…  காத்திருக்கும் ஆபத்து!

ரூ.7,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும்

ஆப்பிள் இணையதளம் மூலம் ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களை வாங்கினால் ரூ.7,000 உடனடி தள்ளுபடி பெறலாம். அதாவது, இந்த தள்ளுபடி மூலம் ரூ.1,64,900 மதிப்பிலான ஐபோன் 18 ப்ரோ ஸ்மார்ட்போனை ரூ.1,57,900-க்கு வாங்கிக்கொள்ளலாம். இதேபோல, ரூ.1,79,900 மதிப்பிலான ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனை ரூ.1,72,900-க்கு வாங்கிக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : குறைந்த விலையில் ஹோம் தியேட்டர் அனுபவம் – ரூ. 25,000க்குள் சிறந்த டால்பி சவுண்ட் பார்ஸ்!

எக்ஸ்சேஞ்சுக்கு ரூ.45,000 முதல் 81,500 பெறலாம்

இதுவே நீங்கள் மேலும் குறைந்த விலையில், ஐபோன்களை வாங்க வேண்டும் என நினைத்தால் எக்ஸ்சேஞ் தேர்வு செய்யலாம். காரணம், பழைய ஐபோன்களுக்கு ரூ.45,000 முதல் ரூ.81,500 வரை பணம் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக ஆப்பிள் ஐபோன்களை நீங்கள் மிக குறைந்த விலையில் வாங்கிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us