ஆப்பிள் செய்த புதிய சாதனை.. ஆப்பிள் டுயோ எவ்வளவு?.. என்ன என்ன சிறப்பு அம்சங்கள்!
Apple Introduced Apple Duo Smartphone Worldwide | ஆப்பிள் நிறுவனம் நேற்று (செப்டம்பர் 09, 2026) தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இந்த நிலையில், ஆப்பிள் அறிமுகம் செய்த டுயோ ஸ்மார்ட்போன் குறித்தும் அதன் சிறப்பு அம்சங்கள் குறித்தும் விரிவாக பார்க்கலாம்.
ஆப்பிள் (Apple) நிறுவனம் நேற்று (செப்டம்பர் 09, 2026) தனது புதிய ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகம் செய்தது. அதாவது, ஐபோன் 18 ப்ரோ (iPhone 18 Pro), ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் (iPhone 18 Pro Max) மற்றும் ஐபோன் டுயோ (iPhone Duo) ஆகியவற்றை அறிமுகம் செய்தது. இவற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஐபோன் டுயோ உள்ளது. காரணம், இதுதான் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஆகும். இந்த நிலையில், ஆப்பிளின் புதிய முயற்சியான இந்த ஆப்பிள் டுயோ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஐபோன் டுயோ – சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
இது திறந்து பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த போன் மடித்த நிலையில் இருக்கும்போது சிறியதாக இருக்கும். இதுவே திறந்த நிலையில், பெரியதாக தோன்றும் . இந்த ஸ்மார்ட்போனில் 5.4 இன்ச் வெளிப்பக்க டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு கையால் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் கிரேட் 5 டைட்டானியம் ஃபேரமை ஆப்பிள் கொடுத்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் மொத்த எடை 254 கிராமாக உள்ளது. இது பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதாக இருக்கும்.
இதையும் படிங்க : இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 3 எலக்ட்ரிக் கார்கள் – எவை தெரியுமா?
ஐபோன் டுயோ – விலை மற்றும் இதர அம்சங்கள்
Official Trailer – iPhone Duo pic.twitter.com/i8fDATWifI
— Apple Design (@TheAppleDesign) September 9, 2026
இந்த டுயோ ஸ்மார்ட்போன் 48 மெகாபிக்சல் டூயல் ஃபேஷன் கேமரா அம்சத்தை கொண்டுள்ளது. இதில் 48 மெகாபிக்சல் ஃபூஷன் மெயின் கேமரா மற்றும் 48 மெகாபிக்சல் ஃபூஷன் அல்ட்ரா வைட் கேமரா அம்சத்தை கொண்டுள்ளது.
இதையும் படிங்க : இன்ஸ்டாகிராமில் வைரலாகும் 80ஸ் போட்டோ டிரெண்ட் – எப்படி உருவாக்குவது?
இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.2,99,900-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, ரூ.3 லட்சத்திற்கு வெறும் ரூ.100 மட்டுமே குறைவாக உள்ளது. இந்த ஐபோன் டுயோ மிகவும் அட்டகாசமான அம்சங்களை கொண்டு இருந்தாலும், அதன் விலை சற்று அதிர்ச்சியடைய செய்யும் விதமாக அமைந்துள்ளது.