AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

உங்கள் துறையில் நீடித்து இருக்க ஏஐ மட்டும் போதுமா?.. இவையும் மிக முக்கியம்!

Is Artificial Intelligence Is Enough For Long Time Survival | செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் ஆதிக்கத்தால், மனிதர்கள் வேலையை இழக்கும் நிலை உள்ளது. இந்த நிலையில், ஏஐ மட்டும் தெரிந்தால் ஒருவரால் தனது துறையில் நீடித்து இருக்க முடியுமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

உங்கள் துறையில் நீடித்து இருக்க ஏஐ மட்டும் போதுமா?.. இவையும் மிக முக்கியம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 15 Sep 2026 15:05 PM IST

உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் ஆதிக்கம் மிக அதிகமாக உள்ளது. அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு அம்சம் அதிகம் பயன்படுத்தப்படும் நிலையில், மனிதர்கள் வேலை இழந்து வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் பெரிய பெரிய நிறுவனங்கள் லட்சக்கணக்கில் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. இந்த நிலையில், செயற்கை நுண்ணறிவு அம்சத்தை படித்தால், கற்றுக்கொண்டால் மட்டுமே துறைகளில் நீடிக்க முடியும் என பரவலான கருத்து உள்ளது. ஆனால், வேலையில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றால் ஏஐ மட்டும் போதாது, இந்த சில அம்சங்களையும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது.

தொழில்நுட்பம் மற்றும் ஏஐ ஃப்ளூயன்சி

பணியில் இருப்பவர்கள் தொழிநுட்பத்தை முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், அவர்கள் செயற்கை நுண்ணறிவு அம்சம் எப்படி செயல்படுகிறது, அதனை எந்த இடத்தில் பயன்படுத்துவது உதவியாக இருக்கும், எந்த இடத்தில் பயன்படுத்துவது தவறாக இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும்.

பகுப்பாய்வு சிந்தனை

ஒரு நொடியில் கோடிக்கணக்கான தகவல்களை செயற்கை நுண்ணறிவு அம்சம் பிராசஸ் செய்யும். இந்த நிலையில், எந்த தகவல் துல்லியமானதாக இருக்கும் என்பதை பகுப்பாய்வது மிகவும் அவசியம் ஆகும். இந்த நிலையில் தான், ஒவ்வொருவரும் தங்களது பகுப்பாய்வு சிந்த்னை பயன்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது.

இதையும் படிங்க : ஐபோன் டுயோவை ரூ.2.30 லட்சத்துக்கே வாங்கலாம்.. அதுவும் 2 நாட்கள் பாங்காக் டூர் உடன்.. எப்படி?

வியாபார புரிதல்

தொழில்நுட்ப அறிவு மட்டும் தொழிலில் முடிவுகளை எடுக்க உறுதுணையாக இருக்காது. இந்த நிலையில் தான் வியாபார புரிதல் கை கொடுக்கும். முன்பு போல உயர் அதிகாரிகளுக்கு மட்டும் இந்த திறன் இருந்தால் போதும் என்ற நிலை மாறி, தற்போது அனைவருக்கும் இந்த திறன் இருக்கும் பட்சத்தில் தான் அவர்களால் தங்களது துறைகளில் நீடித்து இருக்க முடியும்.

இதையும் படிங்க : இனி UPI-லும் “Tap and Pay”.. இரண்டு அட்டகாசமான அம்சங்களை அறிமுகம் செய்த RBI!

சிக்கலை சரிசெய்யும் திறன்

எந்த துறையிலும், வேலையிலும் சிக்கல்கள் இருப்பது இயல்புதான். சிக்கல்கள் இல்லை என்றால், திடீரென கூட சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே காலத்திற்கி ஏற்ப, சிக்கல்களுக்கு எப்படி தீர்வு காணலாம் என்ற புரிதல் உடன் செயல்பட வேண்டியது அவசியமாக உள்ளது.

Follow Us