பெண்களுக்கும் ஒரு தனிப்பட்ட வாழ்க்கை உள்ளது… 9 வருடங்களைக் கடந்தது ஜோதிகாவின் மகளிர் மட்டும் படம் – கொண்டாடும் படக்குழு
9 Years Of Magalir Mattum Movie | நடிகை ஜோதிகா நடிப்பில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் மகளிர் மட்டும். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்ததைப் படக்குழு கொண்டாடி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ஜோதிகா தற்போது பான் இந்திய மொழிகளில் அதிக அளவில் நடித்து வருகிறார். தொடர்ந்து பிசியான நடிகையாக வலம் வரும் நடிகை ஜோதிகா அவ்வபோது இணையதள தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை ஜோதிகா நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் மகளிர் மட்டும் இந்தப் படத்தினை இயக்குநர் பிரம்மா எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனங்களான 2டி எண்டர்டெய்ன்மெண்ட் மற்றும் கிறிஸ் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் சூர்யா மற்றும் கிறிஸ்டி சிலுவப்பன் ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ள நிலையில் படம் மற்றும் பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
மேலும் இந்தப் படத்தில் நடிகை ஜோதிகா கதையின் நாயகியாக நடித்து உள்ள நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் ஊர்வசி, பானுப்பிரியா, சரண்யா பொன்வண்ணன், நாசர், லிவிங்ஸ்டன், பாவல் நவகீதன், கோகுல்நாத், ஜி.மாரிமுத்து, மாயா எஸ்.கிருஷ்ணன், செம்மலர் அன்னம், மது வினோ, கே.ஆர். வந்தனா, ஷோபனா கார்த்திகேயன், மோனா பெத்ரே, மனோபாலா, விதார்த் மற்றும் ஆர்.மாதவன் ஆகியோர் நடித்து இருந்தனர்.




9 வருடங்களைக் கடந்தது ஜோதிகாவின் மகளிர் மட்டும் படம்:
பெண்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான இந்தப் படத்தில் வீட்டில் ஹவுஸ் ஒய்ஃபாக இருக்கும் பெண்களை சும்மா தான இருக்க என்று ஒரு வார்த்தையை ஈசியாக கூறிவிடுகிறார்கள். அப்படி இல்லை அவர்களின் வாழ்க்கை என்பது எவ்வளவு கடினமானது என்பது குறித்து சம்பட்டியால் அடித்தது போல இந்தப் படத்தில் பேசி இருப்பார்கள். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். மேலும் இந்தப் படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனைப் படக்குழு போஸ்டர் வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர்.
Also Read… வைல்கார்ட் போட்டியாளர் ஆனந்தியை கடுப்பேற்றும் போட்டியாளர்கள் – வைரலாகும் வீடியோ
மகளிர் மட்டும் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
9 years of one unforgettable journey with the most fun girl gang. 💙#9YearsOfMagalirMattum pic.twitter.com/FHBvlgBl7U
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) September 15, 2026
Also Read… சியான் விக்ரமின் 63-வது படத்தின் பெயர் என்ன தெரியுமா? வெளியானது அப்டேட்