போட்டியாளர்களிடையே பாரபட்சம் காட்டும் விஜய் சேதுபதி – அதிருப்தியில் பார்வையாளர்கள்
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நிகழ்ச்சி தொகுப்பாளரான விஜய் சேதுபதி வீட்டில் உள்ள போட்டியாளர்களிடையே வாரம் முழுவதும் நடந்த விசயங்கள் குறித்து பேசும் நிலையில் இந்த வாரம் அவர் போட்டியாளர்கள் இடையே பாரபட்சத்துடன் நடந்து கொண்டதாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் முதல் சீசன் தொடங்கியதில் இருந்து தற்போது வரை ஒவ்வொரு சீசனிலும் வாரம் வாரம் நிகழ்ச்சி தொகுப்பாளர் வாரம் முழுவதும் நடந்த நிகழ்வுகள் மற்றும் போட்டியாளர்களின் செயல்கள் குறித்து கேள்வி எழுப்புவார்கள். இது முன்பு கமல் ஹாசன் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த போதில் இருந்தே இருக்கின்றது. அப்போது கமல் ஹாசன் போட்டியாளர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்ட தவறினால் அவரையும் பார்வையாளர்கள் விமர்சிக்க தவறியதில்லை. மேலும் கமல் ஹாசன் கடந்த 7-வது சீசனில் போட்டியாளர்கள் கூறியதை வைத்து தவறான முடிவை எடுத்ததால் மக்களிடையே கடும் எதிர்ப்பை சந்தித்தார். அதனைத் தொடர்ந்து அவர் பிக்பாச் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதை விட்டு வெளியேறினார். ஆனால் அவர் அதற்கு காரணங்கள் வேறு கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவரைத் தொடர்ந்து இந்த பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை கடந்த 8-வது சீசனில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். ஒவ்வொரு வாரமும் இவரும் போட்டியாளர்களை சந்தித்து அவர்களின் நிறை மற்றும் குறைகளை தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் முதல் வார முடிவில் போட்டியாளர்களை சந்தித்து விஜய் சேதுபதி பேசினார்.
Also Read… இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தை அவரே இயக்கி நடிக்கிறாரா? வைரலாகும் தகவல்




போட்டியாளர்களிடையே பாரபட்சம் காட்டும் விஜய் சேதுபதி:
அப்போது முதல் வார கேப்டனாக இருந்த சாதிகவிடம் பல கேள்விகளை எழுப்பினார். ஆனால் வாரம் முழுவதும் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்களை முகம் சுழிக்கும் விதமாக நடந்துகொண்ட முனியம்மாவை எந்த கேள்வியும் கேட்கவில்லை. மாறாக முனியம்மாவின் செயல்களை பாராட்டியும் பேசி உள்ளார். இதனைப் பார்த்த பொது மக்கள் விஜய் சேதுபதி வீட்டில் உள்ள போட்டியாளர்கள் இடையே பாரபட்சத்துடன் நடந்து கொள்வதக தெரிவித்து வருகின்றனர். மேலும் சாதிகாவிற்கு அறிவுறை கூறுவது போல அவர் அரசியல் பேசியுள்ளார் என்ற கருத்தும் வைரலாகி வருகின்றது.
Also Read… பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் கும்பலில் கோவிந்தா போடுவது யார்? போட்டியாளர்களின் கருத்து