AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஜெயிலர் 2 படத்திற்கு கிடைத்த சென்சார் இதுவா? இணையத்தில் வைரலாகும் தகவல்

Jailer 2 Movie Censor Update | தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்தாக வெளியாக உள்ள படம் ஜெயிலர் 2. இந்தப் படத்தின் சென்சார் தொடர்பான தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

ஜெயிலர் 2 படத்திற்கு கிடைத்த சென்சார் இதுவா? இணையத்தில் வைரலாகும் தகவல்
ஜெயிலர் 2Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 12 Sep 2026 16:28 PM IST

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்துப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான கூலி படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஜெயிலர் 2. இயக்குநர் நெல்சன் திலீப் குமார் எழுதி இயக்கிய இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகின்றது. மேலும் முன்னதாக திரையரங்குகளில் வெளியான ஜெயிலர் படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியாகும் பெரும்பான்மையான படங்கள் டார்க் காமெடி பாணியில் உருவாகி வருகின்றது. தொடர்ந்து இந்தப் படமும் அதே பாணியில் உருவாகி உள்ளது. மேலும் படம் வருகின்ற 15-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஜெயிலர் 2 படத்திற்கு கிடைத்த சென்சார் இதுவா?

ஜெயிலர் 2 படத்திற்குத் தணிக்கைக் குழு A சான்றிதழ் வழங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ரஜினிகாந்த் இப்படத்திற்கு U/A சான்றிதழை எதிர்பார்ப்பதாகக் கூறப்படுகிறது. U/A சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே படத்தை வெளியிட வேண்டும் என்றும், இல்லையெனில் படத்தை வெளியிட வேண்டாம் என்றும் ரஜினிகாந்த் படக்குழுவிடம் கூறியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், தணிக்கை சான்றிதழ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இப்படத்தை 2026-ஆம் ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி வெளியிடப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாகத் திட்டமிட்டுள்ளனர்.

Also Read… AOM: யோகி பாபுவின் நடனத்தில்… ரவி மோகனின் இயக்கத்தில் உருவான அன் ஆர்டினரி மேன் படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… See U: கிஷன் தாஸ் – சஞ்சனாவின் சீயூ படத்தின் ‘ஏகாந்தம்’ என்ற முதல் பாடல் வெளியீடு!

Follow Us