AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

AOM: யோகி பாபுவின் நடனத்தில்… ரவி மோகனின் இயக்கத்தில் உருவான அன் ஆர்டினரி மேன் படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு!

An Ordinary Man First Single: தமிழில் இயக்குநராக ரவி மோகன் இயக்கியுள்ளபுதிய திரைப்படம்தான் அன் ஆர்டினரி மேன். இந்த படத்தில் யோகி பாபு ஹீரோவாக நடித்துள்ள நிலையில், இசையமைப்பாளராக கெனிஷா இசையமைத்துள்ளார். இவரின் இசையில் இப்படத்திலிருந்து ஹையர் என்ற பாடல் வெளியாகியுள்ளது.

AOM: யோகி பாபுவின் நடனத்தில்… ரவி மோகனின் இயக்கத்தில் உருவான அன் ஆர்டினரி மேன் படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு!
ஹையர் ப்ரோமோ பாடல்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 10 Sep 2026 19:45 PM IST

சினிமாவில் நடிகராக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரவி மோகன் (Ravi Mohan). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து புதிய திரைப்படங்கள் வெளியாகியவருகிறது. இறுதியாக இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பராசக்தி (Parasakthi). இந்த படமானது கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாகியிருந்த நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருந்த நிலையில், இவருக்கு ஓரளவு வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பின் ரவி மோகன் தொடர்ந்து படங்களில் நடிகராக ஒப்பந்தமானார். இந்த படத்திற்கு பின் தற்போது இயக்குநராக மற்றும் தயாரிப்பாளராகவும் படத்தை உருவாக்குகிறார் அந்த திரைப்படம்தான் அன் ஆர்டினரி மேன் (An Ordinary Man). இதை ரவி மோகன் இயக்க, ஹீரோவாக யோகி பாபு (Yogi Babu) நடித்துள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுவரும் நிலையில், தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளராக கெனிஷா பிரான்சிஸ் (Keneeshaa) இசையமைத்துவருகிறார். இவரின் இசையமைப்பில் தற்போது இப்படத்திலிருந்து ஹையர் (HIGHER) என்ற புரோமோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: 4வது நாளே வைல்டுகார்ட் என்ட்ரியா? பிக் பாஸ் 10ல் நுழைந்த காமம் மேன் நிகழ்ச்சி போட்டியாளர்!

யோகி பாபு மற்றும் ரவி மோகனின் அன் ஆர்டினரி மேன் பட ஹையர் பாடல் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இப்படத்திற்கு கெனிஷா இசையமைத்துள்ள நிலையில், ராப் பாடகர் யுங் ராஜா பாடியுள்ளார். மேலும் இப்பாடலில் யோகி பாபு முதல் முறையாக நடனமாடியுள்ளார். அவருடன் நடிகர் ரவி மோகனும் இப்பாடலில் இணைந்து நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரவி மோகன் மற்றும் யோகி பாபுவின் அன் ஆர்டினரி மேன் படத்தின் ரிலீஸ் எப்போது:

இந்த படத்தை நடிகர் ரவி மோகன் இயக்க, அவரின் புது தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் யோகி பாபு ஹீரோவாக நடிக்க, அவருடன் பல நடிகர்கள் இணைந்து பணியாற்றிவருகிறார்கள். இந்த படத்திற்கு பாடகியும், ரவி மோகனின் தோழியான கெனிஷா பிரான்சிஸ் இசையமைத்துள்ளார். இவர் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ள முதல் படமாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க: சூரி அண்ணனின் கடின உழைப்பு.. மண்டாடி படக்குழுவை வாழ்த்திய சிவகார்த்திகேயன்!

இந்த படத்தில் யோகி பாபு ஹீரோவாக நடித்துள்ள நிலையில், ரவி மோகனும் முக்கியமான வேடத்தில் நடித்திருப்பாகக் கூறப்படுகிறது. இதன் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், இன்னும் நிறைவடையவில்லை. இந்த படமானது சிறப்பான காமெடி மற்றும் எமோஷனல் கதையில் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த விதத்தில் இப்படத்தை வரும் 2026ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியாக தயாராகியுள்ளதாக வட்டாரங்கள் கூறுகிறது.

Follow Us