நடிகர் ரவி மோகன் பிறந்த நாள் ஸ்பெஷல்… வரிசையாக போஸ்டர்களை வெளியிட்டு வாழ்த்தும் படக்குழுவினர்!
Actor Ravi Mohan Birthday | தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரவி மோகன். இவர் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் இவரது நடிப்பில் உருவாகி உள்ள படக்குழுவினர் தொடர்ந்து போஸ்டர்களை வெளியிட்டு தனது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரவி மோகன். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகராக மட்டும் இன்றி தற்போது தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார் ரவி மோகன். அதன்படி அவர் கடந்த ஆண்டு ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறார். மேலும் ரவி மோகன் அன் ஆர்டினரி மேன் என்ற படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகிறார். நடிகர் யோகி பாபு இந்தப் படத்தில் நாயகனாக நடித்து உள்ள நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது வெளியீட்டிற்கான போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியாக வலம் வரும் நடிகர் ரவி மோகன் தற்போது தெலுங்கு சினிமாவிலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். அதன்படி இந்தப் படத்திற்கு வட்டி காசலவாடா என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் முதன் முறையாக சாமி வேடத்தில் நடிக்கிறார். அதன்படி ரவி மோகன் இந்தப் படத்தில் பெருமாள் அவதாரத்தில் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




ரவி மோகன் பிறந்த நாளை முன்னிட்டு போஸ்டர்களை வெளியிடும் படக்குழு:
தொடர்ந்து படங்களில் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் ரவி மோகன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். இந்த நிலையில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் தொடர்ந்து வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர். அந்த பதிவுகள் மற்றும் போஸ்டர்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் படத்தின் வெளியீடுகள் குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று ரசிகர்கள் தற்போது எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
கராத்தே பாபு படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
தலைவன் பிறந்தநாள் இன்று! 🔥
எங்களின் மாண்புமிகு தலைவர்
உயர்திரு சண்முக பாபு @iam_RaviMohan அவர்களுக்கு
கராத்தே பாபு குழுவின் சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!மக்களின் பேராதரவுடன் தலைவன் விரைவில் வருகிறார்… !💐#KaratheyBabu #HBDRaviMohan pic.twitter.com/63AN0XiLqI
— Screen Scene (@Screensceneoffl) September 10, 2026
ஜீனி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Wishing the amazing @iam_RaviMohan a very Happy Birthday!
Working on #Genie with you has been a magical journey, and this BTS clip is just a tiny glimpse of the hard work and passion you bring to the set. Wishing you a year filled with endless success and happiness! Happy… pic.twitter.com/4LIYmCldty
— Vels Film International (@VelsFilmIntl) September 10, 2026
வட்டி காசலவாடா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Happiest Birthday to our beloved @iam_RaviMohan ✨
Blessed to welcome you on board #VaddiKaasulaVaada in the divine role of Lord Govinda who resides in every heart ❤️
Excited for this special journey ahead. Om Namo Venkatesaya 🙏@HeroManoj1 @tej_uppalapati @AnilSunkara1… pic.twitter.com/ch5cQruA2a
— AK Entertainments (@AKentsOfficial) September 10, 2026
Also Read… பிக்பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் இருந்து வெளியேறிய ப்ளாக் பாண்டி – வைரலாகும் வீடியோ
அன் ஆர்டினரி மேன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Happy Birthday to our Boss Man, @iam_RaviMohan Sir. ⭐
Writer. Director. Producer. Actor.
A creative force in every role he takes on.And today, we celebrate with #HIGHER. ⚡
Out now on all audio platforms.
Promo song at 5:05 PM.#RaviMohan #AnOrdinaryMan #aom #Higher pic.twitter.com/BVCcRbY9Ew— Ravi Mohan Studios (@RaviMohanStudio) September 10, 2026
Also Read… அடிமைகளாக வாழும் மக்களை காக்க வருகிறான் ரணபாலி – வெளியானது டீசர்