AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

எனக்கு மிகவும் பிடித்த காமெடி நடிகர் அவர்தான் – நடிகர் சூரி ஓபன் டாக்

Actor Soori Recent Interview | நடிகர் சூரி தொடர்ந்து மண்டாட்டி படத்தின் புரமோஷன் பணிகளில் பிசியாக இருக்கிறார். அந்த வகையில் அவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் தனக்கு மிகவும் பிடித்த காமெடி நடிகர் யார் என்பது குறித்து பேசியுள்ளார்.

எனக்கு மிகவும் பிடித்த காமெடி நடிகர் அவர்தான் – நடிகர் சூரி ஓபன் டாக்
நடிகர் சூரிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 07 Sep 2026 15:49 PM IST

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் சூரி. இவர் காமெடி நடிகராக நடித்த போதே தனக்கு என்று ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து இருந்தார். மேலும் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2024-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான விடுதலை பாகம் ஒன்று முதல் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து நடிகர் சூரி தொடர்ந்து காமெடி கதாப்பாத்திரங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டு தொடர்ந்து நாயகனாக மட்டுமே நடித்து வருகிறார். மேலும் இவர் நாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான கருடன், விடுதலை பாகம் இரண்டு மற்றும் மாமன் ஆகியப் படங்கள் தொடர்ந்து விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வரும் நடிகர் சூரி நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் மண்டாட்டி. இயக்குநர் மதிமாறன் புகழேந்தி எழுதி இயக்கிய இந்தப் படத்தில் சூரி உடன் இணைந்து நடிகர்கள் சுஹாஷ், மஹிமா நம்பியார் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்த படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

எனக்கு மிகவும் பிடித்த காமெடி நடிகர் அவர்தான்:

இந்த நிலையில் நடிகர் சூரி சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் தனக்கு மிகவும் பிடித்த காமெடி நடிகர் யார் என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் அவர் பேசியதாவது, வடிவேலு அண்ணா எனக்கு மிகவும் பிடித்தமானவர்களில் ஒருவர். அவருடைய முகபாவனைகள், உடல்மொழி, வசனம் பேசும் விதம் மற்றும் டைமிங் ஆகியவை மிகச் சிறப்பானவை. இத்தனை ஆண்டுகள் கடந்த பிறகும், மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் அவருடைய வசனங்களையும் பாவனைகளையும் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். பார்வையாளர்களுடன் அத்தகைய நீடித்த பிணைப்பை ஏற்படுத்துவது எந்தவொரு கலைஞருக்கும் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும் என்று தெரிவித்து இருந்தார்.

Also Read… மண்டாட்டி படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை பெற்றது ரெட் ஜெயண்ட் மூவிஸ்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… பிக்பாஸ் தமிழ் சீசன் 10-ல் முதல் நாளே வெளிநடப்பு செய்த போட்டியாளர் முனியம்மா – வைரலாகும் வீடியோ

Follow Us