AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Rajisha Vijayan: சர்தார் 3 படத்தில் நான்தான் மெயின்.. கலகலப்பாக ஹின்ட் கொடுத்த நடிகை ரஜிஷா விஜயன்!

Rajisha Vijayan About Sardar 3:மலையாள சினிமாவில் நாயகியாக இருந்துவருபவர் ரஜிஷா விஜயன். இவரின் நடிப்பில் தமிழில் வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்த படம் சர்தார். இப்படத்திற்கு பின் சர்தார் 2 படத்திலும் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ரஜிஷா விஜயன், சர்தார் 3 படம் குறித்து ஹின்ட் குறித்துள்ளார்.

Rajisha Vijayan: சர்தார் 3 படத்தில் நான்தான் மெயின்.. கலகலப்பாக ஹின்ட் கொடுத்த நடிகை ரஜிஷா விஜயன்!
சர்தார் 3 பற்றி ரஜிஷா விஜயன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 06 Sep 2026 12:36 PM IST

கோலிவுட் சினிமாவில் கலக்கிவரும் மலையாள நடிகையாக இருப்பவர் ரஜிஷா விஜயன் (Rajisha Vijayan). இவர் தனுஷ் (Dhanush) முதல் சூர்யா (Suriya) உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்களுடன் படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார். இவரின் நடிப்பில் இறுதியாக தமிழில் வெளியான திரைப்படம் பைசன் (Bison). இந்த படமானது அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியிருந்த நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் நடிகர் துருவ் விக்ரமின் (Dhruv Vikram) சகோதரியாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு பின் ரஜிஷா விஜயனின் நடிப்பில் 2026ம் ஆண்டில் வெளியாகவுள்ள தமிழ் படம்தான் சர்தார் 2 (Sardar 2). இதில் கார்த்தி (Karthi) லீட் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ரஜிஷா விஜயனும் நடித்துள்ளார்.

சர்தார் 1 படத்தில் இவர்தான் மெயின் நடிகையாக நடித்திருந்த நிலையில், சர்தார் 2 படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. அதை முன்னிட்டு சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ரஜிஷா விஜயன், சர்தார் 3 படம் குறித்து கலகலப்பாக ஹின்ட் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: ஏஜிஎஸ் என்டேர்டைமென்ட் நிறுவனத்தின் கீழ் புது படத்தில் இணைத்த ஜெய் மற்றும் பிரியங்கா மோகன்!

சர்தார் 3 படம் குறித்து ஹின்ட் கொடுத்த நடிகை ரஜிஷா விஜயன்:

அந்த பேட்டியில் பேசியிருந்த நடிகை ரஜிஷா விஜயன், “சர்தார் 2 படமானது ஒரு பிரம்மாண்ட படமாக பார்ப்பவர்களுக்கு பீக் ஆகும். சர்தார் 1 படத்தை பார்த்த பார்வையாளர்களுக்கு, இது ஒரு சிறப்பான 2வது பார்ட் என தோன்றும். இதுக்கும் மேல் பிரம்மாண்டமாக இருக்கும் சர்தார் 3 பார்ட், அதில் நான்தான் மெயின் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ் சினிமாவில் நான் நடித்த முதல் படம் ட்ராகன் இல்லை… கயாடு லோஹர் ஓபன் டாக்

அதன் பின் பேசிய இயக்குநர் பி.எஸ்.மித்ரன், “நான்தான் சொன்னேனே, சர்தார் 2 படமானது ப்ரீகுவல் அண்ட் சீக்குவல்”. மேலும் தொகுப்பாளர் “சர்தார் 3 உருவாகுமா சார்?” என கேட்டார். அதற்கு இயக்குனர் பி.எஸ்.மித்ரன்.,”எப்ப சும்மா இருப்பா, சர்தார் 2 முதலில் வெளியாகட்டும்” என கலகலப்பாக பேசியிருந்தார்.

சர்தார் 3 திரைப்படம் குறித்து நடிகை ரஜிஷா விஜயன் பேசியதாக இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு:

சர்தார் 2 படமானது கார்த்தி, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா போன்ற பல்வேறு பிரபலங்களும் இணைந்து பணியாற்றியுள்ளனர். அதிரடி ஆக்ஷன் மற்றும் மெடிக்கல் மாஃபியா கதையில் உருவாகியுள்ள இப்படம், 2026ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதியில் வெளியாக தயாராகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us