கொழு கொழுவென கியூட்டாக இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா? பாலிவுட் டூ கோலிவுட்டை கலக்கும் நடிகை இவர்!
Actress Childhood Photo: தென்னிந்திய சினிமாவில் பல்வேறு நடிகைகள் படங்களில் நாயகிகளாக நடிக்கிறார்கள். அந்த விதத்தில் இவர்களின் சிறுவயது மற்றும் அடையாளம் தெரியாத புகைப்படங்கள் இணையத்தில் பரவுவது வழக்கம். இந்நிலையில் இந்த போட்டோவில் கொழு கொழுவென இருக்கும் குழந்தை யார் என பார்க்கலாம்.
இணையதளங்களில் நடிகர்கள் மற்றும் நடிகைகளில் அடையாளம் தெரியாத புகைப்படங்கள் வைரலாகுவது உண்டு. அந்த விதத்தில் மேலே உள்ள போட்டோவில் கொழு கொழுவென கியூட்டாக இருக்கும் குழந்தை யார் என தெரிகிறதா?. இவர் டெல்லியில் பிறந்த நிலையில், இந்தி சினிமாவின் (Bollywood) மூலமாக சினிமாவில் நுழைந்தார். இவரின் தாய் மொழி இந்தி ஆகும். இவர் தெலுங்கு சினிமாவில் (Telugu Cinema) நடிக்க தொடங்கிய நிலையில், தமிழ் மொழியிலும் நாயகியாக நடித்திருக்கிறார். தனது முதல் படத்திற்க்கே அதர்வாவுக்கு (Atharvaa) ஜோடியாக நடித்திருந்தார். தமிழில் இவர் நடித்த முதல் படம் கடந்த 2018ம் ஆண்டில் வெளியாகியது. இந்த படம் இவருக்கு சிறப்பான வரவேற்பபை கொடுக்க, இதுவரை விஜய் சேதுபதி (Vijay Sethupathi) முதல் தனுஷ் (Dhanush) வரை பல்வேறு உச்ச நடிகர்களுடன் படங்களில் பணியாற்றியுள்ளார்.
மேலும் இந்தி சினிமாவிலும் படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார். இவர் தற்போது சூப்பர் ஸ்டாருடன் திரைப்படத்தில் நடிக்கிறார், இப்போது இவர் யார் என தெரிந்திருக்கும். அட இந்த கியூட் குழந்தை நடிகை ராஷி கன்னாதான் (Raashii Khanna).




இதையும் படிங்க: சியா என்ட்ரி லோடிங்… இன்று மாலை வெளியாகும் ஓம் படத்திலிருந்து மம்முட்டியின் கிளிம்ப்ஸ் வீடியோ!
நடிகை ராஷி கன்னாவின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:
View this post on Instagram
நடிகை ராஷி கன்னா சினிமாவில் கடந்துவந்த பாதை:
தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை நடிகை ராஷி கன்னா டெல்லியில் முடித்தார். இந்தியை தாய் மொழியாக கொண்ட இவர், தனது கல்லூரி காலங்களிலே மாடலிங் மீது ஆர்வம் கொண்டிருந்தார். பின் இந்தியில் மெட்ராஸ் கஃபே என்ற படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். 2013ம் ஆண்டில் வெளியான இப்படத்தில் ரூபி சிங் என்ற வேடத்தில் நடித்தார். தொடர்ந்து இந்தி மொழியில் நடிக்க தொடங்கியிருந்த நிலையில், தெலுங்கில் ஓஹாலு குசகுசலேட் என்ற படத்தின் மூலமாக நாயகியாக நுழைந்தார். இந்த படத்திற்கு பின் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கியிருந்தார். மேலும் இவருக்கு தமிழில் முதல் படமாக அமைந்தது இமைக்கா நொடிகள்.
இதையும் படிங்க: கொடியை கொடுங்கள் கோட்டையை பிடிப்போம் – ரவி மோகன் ரசிகர் மன்ற விழாவில் பரபரப்பு
2018ம் ஆண்டில் அதர்வாவுக்கு ஜோடியாக இதில் நடித்திருந்தார். இதன் பின் விஜய் சேதுபதி, விஷால், ரவி மோகன் மற்றும் தனுஷ் போன்ற நடிகர்களுடனும் படங்களில் நடித்திருந்தார். இதில் இவருக்கு ரவி மோகனுடன் நடித்திருந்த அடங்கமறு படகு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. இதன் பிறகு தற்போது இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்மன் படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் சிறப்பாக நடக்க, இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.